குமரன்

எதிரிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருகிறது!-டிரம்ப்

பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது. ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி ...

Read More »

சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!

சியோமி நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது. சாம்சங் நிறுவனம் மடிக்ககூடிய ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிடலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் ஏற்கனவே தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் சாம்சங் போன்றே சியோமி நிறுவனமும் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் காணொளியை பகிர்ந்துள்ளார். இதில் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இருவிதங்களிலும் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றம்!

நவுருத்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த அகதிகளின் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முறையான மருத்துவமின்றி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் குடும்பங்களுடன் குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸூக்கு முன்னதாக மூன்று குடும்பங்களையும் அவர்களது குழந்தைகளையும் ஆஸ்திரேலியாவுக்கு மாற்றியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நவுரு தடுப்பு முகாமில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ஏழாக குறைந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்படும் நான்கு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். நவுருத்தீவில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகள் முறையான மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு ஒன்று ...

Read More »

சிட்னி டெஸ்ட்- 7 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா!

சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 193 ரன்கள் குவித்த புஜாரா, 7 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 3-வது வீரராக களமிறங்கி விளையாடி வரும் புஜாரா அபாரமான ...

Read More »

கூகுள் மேப்ஸ் செயலியிலும் குறுந்தகவல் அனுப்பலாம்!

கூகுள் மேப்ஸ் செயலியில் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல்களை அனுப்ப முடியும். கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம். எனினும், இந்த அம்சம் கொண்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியாது. புதிய அம்சம் மூலம் கூகுள் மேப்ஸ் செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கும் வியாபார மையங்களுக்கு மட்டுமே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி தலைமையில் களமிறங்கி உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி ...

Read More »

நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சீன விண்கலம்!

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தை, கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கி சீனா சாதனை படைத்துள்ளது. நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி, அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதற்காக சீன விண்வெளி ஆய்வு மையம், சாங் இ (Chang’e Program) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது ‘சாங் இ ...

Read More »

சபாநாயகர் இன்று வடக்கிற்கு விஜயம்!

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது சபாநாயகருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் வடக்கிற்கு செல்லவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் பற்றியும் விசேட கூட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இடம்பெறவுள்ளது.

Read More »

யாழ் மாநகரசபையில் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு!

யாழ் மாநகரசபையின் மாதாந்த மற்றும் விசேட அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு முதல்வரினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகரசபையின் மாதந்த மற்றும் விசேட அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாயின் குறித்த ஒவ்வொரு அமர்வின்போதும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டிடம் எழுத்துமூல அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் மாநகசபை வளாகத்தில் மாநகரச் செயலாளரின் ஒப்பத்துடன் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, யாழ் மாநகரசபையின் மாதாந்த, விசேட கூட்ட அமர்வுகளினை பார்வையிடுவதற்கு செல்லும் பார்வையாளர்கள் மற்றும் செய்தி சேகரிப்பதற்காக ...

Read More »

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஐன்ஸ்டைனின் நாக்கு!

நான் ஒரு பெரிய ஜீனியஸ். அற்ப மானிடப் பதர்கள் எல்லாம் பத்து கிலோ மீட்டர் தள்ளி வாருங்கள் என்று ஐன்ஸ்டைன் ஒருபோதும் ஒருவரிடமும் சொன்னதில்லை. ஐந்தாவது வகுப்பு மாணவர்கூட, ’ஐயா ஒரு ஐயம்’ என்று அவரை அணுகிவிட முடியும். குனிந்து தோளைப் பிடித்து என்ன என்று பரிவோடு கேட்பார். ஐன்ஸ்டைன் குளிக்கப் போகும்போதுகூட இடைமறித்து, ‘குவாண்டம் எந்திரவியல் என்றால் என்ன, ரொம்ப அவசரம்’ என்று நீங்கள் கேட்கலாம். அவரும் துண்டை மேஜையின்மீது வைத்துவிட்டு, இப்படி வா சொல்கிறேன் என்று ஒரு மணி நேரம் வகுப்பெடுத்துப் ...

Read More »