குமரன்

சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு விடுவேன்!

சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் என்று நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார். நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் சரி குடும்ப வாழ்க்கைக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் நான் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன். நாம் ...

Read More »

ஆண்டுகளோ பத்து; வார்த்தைகளோ பொய்த்து!

“முப்பது ஆண்டுகாலப் போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கழிந்தும் தீர்வு வராதது வருத்தம்; இலங்கை மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன; அபிவிருத்தி அடைவதில் தோல்வி கண்டுள்ளோம்; செந்தணலின் மீதுள்ள சாம்பல் மீது நல்லிணக்கம் நிற்கின்றது; ஊழலை ஒழிக்க முடியாது உள்ளது; போதைப் பொருள் வணிகத்தை அழிக்க முடியாது உள்ளது” இவ்வாறாக, இலங்கையின் 71ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரிசையாகத் தெரிவித்த உண்மையும் ஏமாற்றமும் கலந்த உரை இதுவாகும். முப்பது ஆண்டு கால யுத்தம் ...

Read More »

கோத்தாவை எச்சரித்த நீதிமன்றம்!

உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத காரணத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.   இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7  பிரதிவாதிகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முதல் பிரதிவாதியான கோத்தா மறில் ஆஜராகவில்லை. அத்துடன் 6 ஆம் பிரதிவாதியும் மன்றில் இருக்கவில்லை. இந் நிலையில் பெயர் வாசிக்கப்பட்டபோது 2,3,4,5,7 ஆம் ...

Read More »

பாகிஸ்தானுக்கு உதவ தயார் – சர்வதேச நிதியம் தகவல்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சர்வதேச நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடியில் அந்நாடு உள்ளது. அந்நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு வெறும் 8.12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57 ஆயிரத்து 650 கோடி) மட்டுமே உள்ளது. இது ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும். அது மட்டுமின்றி இந்த தொகை, 7 ...

Read More »

அரசியல் களத்தில் விஜய் ஆண்டனி!

அடுத்தடுத்து படங்களில் பிசியாகி வரும் விஜய் ஆண்டனி, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். `திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்’ படம் ரிலீசாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, `அக்னிச் சிறகுகள்’, `தமிழரசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைவதில் ...

Read More »

ஆஸி. வதிவிட உரிமைபெற்ற வெளிநாட்டவர்கள் தாய்நாடு சென்றபோது கைது?

அவுஸ்திரேலியாவில் வதிவிட உரிமை பெற்றுக்கொண்ட 17 சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்டவர், சீன இரகசியப்படையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது. தங்களது உறவினர்களை காண்பதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இவ்வாறு இரகசிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் பலரது மனைவிமார் மற்றும் குழந்தைகள் அவுஸ்திரேலிய குடியுரிமையுடைவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் நால்வர் வீட்டுக்காவலிலும் ஏனையோர் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது. சீன அரசினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுவருவதாக கூறப்பட்டும் Uighur சிறுபான்மை ...

Read More »

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பணி பூர்த்தி!

இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி  யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பகுதியில் தூபியை அமைப்பதற்கு கொழும்பின் உத்தரவுக்கு அமைவாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்ப கட்ட வேலையுடன் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்கும் பணிகளை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவுறுத்தியுள்ளனர். இறுதிப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் ...

Read More »

தேர்தலுக்கான அரசியல் !

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்ற முயற்சிகள் குறித்தும் பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரிசையாகத் தெரு முனையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நிலைமையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சியின் மூலம் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி காலதாமதமின்றி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. நாட்டில் இது ஒரு வேடிக்கையான அரசியல் நிலைமையாகப் பரிணமித்திருக்கின்றது. நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தின்போது ...

Read More »

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை 14ம் திகதிக்கு பின்னர்!

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்,குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர் வரும் 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளி வரும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். எலும்புக்கூட்டு மாதிரிகளின் ஆய்வு அறிக்கை தொடர்பாக இன்று (11) அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பிற்கு ...

Read More »

காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நா. கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழுவின் 117 ஆவது கூட்டத் தொடர் பொஸ்னியாவிலும், ஹெசகோபினாவிலும் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இக் கூட்டத் தொடரில் 37 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற 760 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை இடம்பெறவுள்ளது. அத்துடன் இதில் இலங்கையும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »