குமரன்

போர்முனையும் பேனா போராளியும்!

‘த சண்டே டைம்ஸ்’ என்ற இங்கிலாந்து நாளிதழின் போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றிய மேரி கால்வின் ஒரு அமெரிக்கர். துணிச்சல் அவரது தனி அடையாளம். உலகத்தில் எங்கே போர் மூண்டாலும் அங்கே களமிறங்கி ரத்தமும் சதையுமாகப் போரின் அவலங்களை ஆதாரத்துடன் வெளியிடுவார். சொந்த மக்களைக் கொன்றொழிக்கும் அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்தியதற்காக அச்சுறுத்தலுக்கு ஆளானார். பரிசாக உடலில் பல காயங்களைப் பெற்றதுடன் ஒரு கண்ணையும் இழந்திருக்கிறார். கொசோவோ, செசன்யா, ஜிம்பாப்வே அரபு நாடுகள் எனத் தொடர்ந்த போர்முனைகளின் வரிசையில் அவர் இலங்கையில் செய்தி சேகரிக்கச் சென்றபோதுதான் ...

Read More »

சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்!

சீன தலைவர் மெங் ஹாங்வே ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் என இண்டர்போல் தெரிவித்துள்ளது. பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சீன தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார். கடந்த செப்டம்பர் முதல் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாககாவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மெங் ஹாங்வே செப்டம்பர் 29-ம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது முதல் அவரை காணவில்லை என தகவல் ...

Read More »

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் – முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 255/3

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் இமாம் உல் ஹக், மொகமது ஹபீசின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முகமது ஹபீஸ் 172 பந்தில் 12 பவுண்டரியுடன் ...

Read More »

தலதாமாளிகையின் முன்னால் பிரகீத் மனைவி போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்!

எனது கணவர் தொடர்பான விடயத்தில் நீதி வழங்கப்படாவிட்டால் நான் நீதியை கோரி மிகக்கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார். இதன் முதல்கட்டமாக எனது கணவர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரி பத்தாம் திகதி கண்டிதலதா மாளிகையின் முன்னால்சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். சந்தியா எக்னலிகொட முன்னெடுக்கவுள்ள இந்த போராட்டத்தில் காணாமல்போனவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 28 ம் திகதியிலிருந்து நான் ஆரம்பித்துள்ள 60 நாள் போராட்டத்தின் ஒரு பகுதியே இதுவென குறிப்பிட்டுள்ள அவர் ...

Read More »

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரை பராமரித்த வைத்தியர் காலமானார்!

தமிழீழ தேசியத்தலைவரது தாயாரினை இவரது இறுதி வரை பராமரித்து வந்த வைத்திய அதிகாரி மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் இயற்கை எய்தியுள்ளார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் (ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி ) இன்று ஞாயிறு காலை இயற்கையெய்தியிருந்தார். சிறந்த வைத்திய நிபுணரான, அவர் இலங்கை இந்திய இராணுவ காலப்பகுதியில் வடமராட்சி பிரதேச மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய சேவையாளராவார். தமிழீழ தேசிய தலைவரின் நன்மதிப்பினை பெறறிருந்த மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நேசித்து ஆத்மாக்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இன்று முதல் நேரமாற்றம்!

அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் நேரமாற்றம் இன்று(7) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு அமுலுக்கு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2மணிக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக முன்னோக்கி நகரவுள்ளது. குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

அரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அதே காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழமுதம் என்ற பெயரில் ஒரு தமிழ் விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. அவ்விழாவிற்கு நிதி அனுசரணை செய்தவர்களுள் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக பணிப்பாளரும் ஒருவர். ஐம்பதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கிய இவர் கூட்டமைப்பின் கனடா அணியைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் ...

Read More »

புதிய நிறத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்!

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனினை புதிய பர்கன்டி ரெட் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு, மிட்நைட் பிளாக், கோரல் புளு மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக லேவென்டர் பர்பிள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் ...

Read More »

அமெரிக்கா, வடகொரியா தலைவர்கள் இரண்டாவது சுற்றுப்பேச்சு!

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றதை அடுத்து, ட்ரம்ப் உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய ...

Read More »

சிறுவர்களின் உரிமையை மறுக்கும் நாடுகளை உலகம் மயிலிறகால் தடவுகிறது!

ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள். குழந்தைகள் தங்கள் வாழ் நிலத்திற்காக போராடுகிறார்கள். உரிமை மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட இனத்தின் குழந்தைகள் எதையெல்லாம் சந்திக்கவேண்டுமோ அதை எங்கள் குழந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால்தான் மாபெரும் இழப்பும் மாபெரும் அபாயங்களும் நின்று மிரட்டுகின்றன. அவர்களைத்தான் சூனியமான எதிர்காலம் அச்சுறுத்துகிறது. எங்கள் குழந்தைகள் குழந்தைகளாக பார்க்கப்படுவதில்லை. அவர்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை. பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது. எத்தனையோ குழந்தைகள் எங்கள் மண்ணில் சிங்கள ...

Read More »