குமரன்

த.தே.கூட்டமைப்பு – ஐ.தே.கட்சி சந்திப்பு நாளை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர். இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இறுதித் தீர்மானத்தினை எடுத்திருக்காத நிலையில் இச்சந்திப்பு இடம்பெறுகின்றது. முன்னதாக சஜித் ...

Read More »

இரண்டாவது ராஜபக்சவுக்கு எதிராக இரண்டாவது பிரேமதாச!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி அதன் மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளர் என்று சொல்லக்கூடிய சஜித் பிரேமதாசவை களமிறக்கியிருக்கிறது. ஜனாதிபதி பதவிக்கான இந்த போட்டியில் ஒரு இரண்டாவது ராஜபக்சவுடன் ஒரு இரண்டாவது பிரேமதாச மோதுகிறார் என்று இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கில தினசரிகளில் ஒன்றான ‘ த இந்து ‘ நேற்று சனிக்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அந்த ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ; ஐக்கிய தேசிய கட்சி நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ...

Read More »

நியூயார்க்கில் இம்ரான்கானுக்கு எதிராக முழக்கமிட்ட சமூக ஆர்வலர்!

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கானுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற பெண் சமூக ஆர்வலர் பங்கேற்று முழக்கமிட்டார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர் தனது சிறுவயது முதல் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குழந்தைகள் திருமணம், பெண் ஆணவக் கொலைகள் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். கைபர் பக்துன்வா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் ...

Read More »

நம்ம வீட்டுப் பிள்ளை! – விமர்சனம்

அப்பா இல்லாத மகன், தன் தங்கையின் மீது அதிக பாசம் வைத்துள்ளார். அந்த தங்கையின் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும் போது என்ன செய்கிறார் என்பதே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் சிவகார்த்திகேயன். அம்மா அர்ச்சனா, தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ், தாத்தா பாரதிராஜா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். தன் அப்பாவுடன் பிறந்தவர்களான வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, ஆதிரா ஆகியோரின் ஆதரவில்லாமல் இருக்கிறார். தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைக்கும் போது நின்று விடுகிறது. அப்போது ...

Read More »

அரசியல் இராஜதந்திர அணுகுமுறையின் அவசியம்!

ஒரு மரணச் சடங்கின் மூலம் மத ஆதிக்கத்தையும், இன மேலாண்மையையும் நிலைநிறுத்த முடியும் என்பதற்கு முன் உதாரணமாக நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் இடம்பெற்ற கொலம்பே மேதானந்ததேரருடைய இறுதிக்கிரியைகள் புலப்படுத்தி இருக்கின்றன. இந்த அடாவடித்தனச் செயற்பாடு மத ரீதியானது மட்டுமல்ல. ஆக்கிரமிப்புக்கான போர்க்குணம்; கொண்டதோர்  அரசியல் நடவடிக்கையும்கூட. இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள மென்போக்கிலான சண்டித்தனத்தையும், சர்வாதிகாரத்தையும் எவ்வாறு தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாகும். இந்த இறுதிக்கிரியை நீதிமன்ற உத்தரவை மீறிச் செய்யப்பட்டன. இந்துக்களின் மதரீதியான கலாசாரப் பண்பாட்டு உரிமைகளை ...

Read More »

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு! அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சி.ஐ.டி. க்கு உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல் துறை  பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 10ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் ...

Read More »

தமிழ் கூட்டமைப்புடனும் பேச்சு நடத்த தயார்!

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் சம்பந்தன் -விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் தலைவர்களுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ் கட்சிகள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் கூறுகின்றனர்.   இம்முறை தேர்தலில் தமிழ் -முஸ்லிம் மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தி எனவும் தெரிவித்தனர். கடந்த ஜனாதிபதி தேர்தல்களை போல் அல்லாது பல புதிய ...

Read More »

டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் – வடகொரியா

இருதரப்பு உறவை புதுப்பிக்க டிரம்ப் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும் என்று வடகொரியா வெளியுறவு கொள்கைகளுக்கான ஆலோசகர் கிம் கே குவான் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் அமெரிக்கா-வட கொரியா இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை சரிசெய்ய இருநாட்டு தலைவர்களும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அணுஆயுத பிரச்சினையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் துணிச்சலான ஒரு ...

Read More »

ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம்!

விருது விழாவில் அஜித்துடன் நடிக்க ஆசை எனக் கூறியவுடன் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்ததை பார்த்து நடிகை ராஷ்மிகா வாயடைத்து போய்விட்டாராம். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ’சுல்தான்’ படம் மூலம் தமிழில் ...

Read More »

அப்பட்டமான சாட்சியம்!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் கொலம்பே மேதாலங்காதேரருடைய சடலம் பலாத்காரமாக எரியூட்டப்பட்டதன் மூலம் நீதித்துறையின் முகத்தில் கரிபூசப்பட்டிருக்கின்றது. நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்து, அதற்கு முரணான வகையில் ஓர் இந்து ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. பேரின மத அகங்காரத்துடன் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பௌத்த மதத் திணிப்பையே இது வெளிப்படுத்தி உள்ளது. சிங்கள பௌத்த தேசியத்தை முழு மூச்சாகக் கொண்டுள்ள பௌத்த மதச் சண்டித்தனம் இந்தச் சம்பவத்தில் மிகக் கோரமாக தலை நிமிர்த்தி இருக்கின்றது. சிங்கள ...

Read More »