குமரன்

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். எனக்குக் கிடைத்த அறிக்கையின் படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை எடுத்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தினரை நான் இன்று சந்திக்க இருக்கின்றேன். அத்தோடு அந்த மாணவர்களுக்கு ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு?

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார். ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தான் வேறுபாடு உண்டு. 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று அதை ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அவர் சொன்னார். ...

Read More »

தனிப்பட்ட நபர்கள் தலையிட வேண்டாம்!

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு சிறிலங்கா  ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள், கடிதம் அல்லது தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு வழிகளிலும் அரசாங்க செயற்பாடுகள் தொடர்பில் ஆணைகள் வழங்கக்கூடாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சார்ப்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் ...

Read More »

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் – பொதுமக்கள் கடும் கோபம்

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு அவர் பீஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு சீனரும் இந்த நாட்டில் வாழ்வதற்காக பெருமைபடும் வகையில் இந்த ஆண்டு முன்னேற்றம் இருக்கும். நமது நாட்டின் ...

Read More »

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் அறிவித்துள்ளார். சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் 37000-க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ...

Read More »

ஆஸ்கர் 2020 – விருது வென்றவர்கள் முழு விவரம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கிய 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் ...

Read More »

என்னால் அப்படி செய்ய முடியாது!

இசையமைப்பாளர் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, என்னால் அப்படி செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி துபாயில் நடக்கிறது. இதுகுறித்து துபாயில் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழ் பட உலகில் இருக்கும் இசையமைப்பாளர்கள், திரைப்படங்களுக்கு சுதந்திரமாக இசையமைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது:- இசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் விருப்பத்துக்கு இசையமைத்தால் அதை முழு சுதந்திரம் ...

Read More »

கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும்!- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

சீனாவில் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர். ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். காற்றிலோ, தரையிலோ கூட 9 ...

Read More »

சிறையில் உள்ள ஜோடி திருமணம் செய்துகொள்ள அனுமதியா?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இருவர் தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் தனித்தனியே மனு அளித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பரிபா அதெல்காஹ், ரோலண்ட் மார்சல். இருவரும் ஆராய்ச்சியாளர்கள். 60 வயது கடந்த இவர்கள் 38 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், பரிபா ஈரானுக்கு ஆராய்ச்சி நடத்த சென்றார். ஆனால் அவர் உளவு வேலை பார்த்ததாக கைது செய்யப்பட்டு, அங்குள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக ஈரான் ...

Read More »

ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள்! – சமந்தா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி – திரிஷா நடித்த ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை ...

Read More »