அரசியல் இலாபங்களுக்காக தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை தியாகம் செய்ய வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தமிழ் அரசியல் வாதிகளை வலியுறுத்தியுள்ளார். இன்றைய இளைஞர்கள் வெற்றிகரமான வாழ்க்கை வாழவும் மாகாணத்தை அபிவிருத்தி செய்யவும் மட்டுமே விரும்புகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இளைஞர்களைப் பயன்படுத்துவதைக் கண்டித்த அவர், ஒரு நினைவுச் சின்னத்தை அகற்றுவதற்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆரம்பித்த ஹர்த்தால் குறித்தும் கருத்துக் கூறினார். தமிழ் அரசியல் தலைமை இளைஞர்களை தமது சொந்த அரசியல் குறிக்கோள்களுக்காக ...
Read More »குமரன்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி குறித்த முடிவை பல்கலைகழகமே எடுத்தது!
யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்கும் அரசாங்கத்திற்கும் எந்ததொடர்பும் கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் அரசாங்கம் எந்த கொள்கை தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிக்கும் முடிவையும் பின்னர் அதனை மீள உருவாக்குவது என்ற முடிவையும் யாழ் பல்கலைகழக நிர்வாகமே எடுத்தது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read More »இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகளை மீட்போம்! -நேபாள பிரதமர்
இந்தியாவிடம் இருந்து 3 பகுதிகள் மீட்கப்படும் என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் உரிமை கோரி வருகிறது. இந்த மூன்று பகுதிகளையும் தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரை படத்தை நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி வெளியிட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கே.பி.சர்மா ஒலி கூறி வந்தார். இதற்கிடையே நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ...
Read More »‘ஆரி’ய டைட்டில் வின்னர் ஆக்குங்க – பிரபல நடிகர் வேண்டுகோள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டுள்ள நடிகர் ஆரிக்கு நிறைய ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குமாறு பிரபல நடிகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4-ம் திகதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த வார இறுதியில் யார் வெற்றியாளர் என்பது தெரியவரும். தற்போதைய சூழலில் நடிகர் ஆரி வெற்றியடைய அதிக வாய்ப்புகள் ...
Read More »ஏழு வரியில் விளக்கம் அளித்த வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு மத்தியில் அந்நிறுவனம் ஏழு வரியில் விளக்கம் அளித்து இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்தது. மேலும் இதன் மூலம் வாட்ஸ்அப் விவரங்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசிக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியதோடு, பலரும் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்தனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்து உள்ளது. – வாட்ஸ்அப் ...
Read More »ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இருந்து விஹாரி, பும்ரா விலகல்
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ளனர். இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. வெற்றியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பென் ...
Read More »விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்
தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பைகார் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காகும். இதில் விஜய் சேதுபதி காமெடி வேடத்தில் நடிக்க உள்ளதாக ...
Read More »சிட்னி மைதானத்தில் ஆரி ரசிகர்கள் செய்த செயல்….
சிட்னி மைதானத்தில் பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரமே மீதமுள்ள நிலையில், ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ஆரி தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவருக்கான ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்களை அடிலெய்டில் தனிமைப்படுத்த முடிவு
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் முன்னணி வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி முதல் 21-ந்திகதி வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்க 1,270 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர்கள் அடுத்த வார இறுதியில் வர உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தங்குவதற்கு மெல்போர்னில் ஓட்டல் அறைகள் பற்றாக்குறையாக இருப்பதால் 50 ...
Read More »சிறிலங்கா பிரதமரின் ஊடகப் பணிப்பாளர் கைது
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ஹேரத், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பிரதேசத்தில் வைத்து தன்னுடைய வாகனத்தில் இருவரை முட்டிமோதி காயப்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அவர் மதுபோதையில் இருந்தார் என நவகமுவ காவல் துறையினர் தெரிவித்தனர். எனினும், சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதேநேரம் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விஜயானந்த ஹேரத் தனது சொந்த வாகனத்திலேயே இருந்துள்ளார் என்றும் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			