ஏழு வரியில் விளக்கம் அளித்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு மத்தியில் அந்நிறுவனம் ஏழு வரியில் விளக்கம் அளித்து இருக்கிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்தது. மேலும் இதன் மூலம் வாட்ஸ்அப் விவரங்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசிக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியதோடு, பலரும் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்து உள்ளது.
 வாட்ஸ்அப்
– வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.
– குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் அழைப்பை மேற்கொள்வது யார் என்பதை வாட்ஸ்அப் கண்காணிக்காது.
– வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் லொகேஷனை பார்க்க முடியாது.
– வாட்ஸ்அப் பயனரின் காண்டாக்ட்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.
– வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.
– குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
– பயனர் தங்களின் டேட்டாவை டவுன்லோட் செய்ய முடியும்.
இவ்வாறு வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.