குமரன்

அமெரிக்கா: துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் செவ்வாயன்று செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். இன அநீதி குறித்த சமூக அமைதியின்மை பல மாதங்களாக அமெரிக்காவை உலுக்கியதால், பிடென் ஒரு கறுப்பினப் பெண்ணை தனது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். இந் நிலையிலேயே 55 வயது செனட் சபை உறுப்பினரான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி ...

Read More »

துணைவேந்தர் பதவிக்காக 5 பேர் பேரவைக்கு முன்மொழிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும், 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்கான, பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம், இன்று (12) நடைபெற்றது. இதன்போது, விஞ்ஞான பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும் கணிதப் புள்ளி விவரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும் ...

Read More »

சிறிலங்காவில் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மகுல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. பதவியேற்புக்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகியிருந்தன. இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள 26 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அத்துடன், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனமும் வழங்கப்பட்டது. மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம் கொழும்பு மாவட்டம் – பிரதீப் உதுகொட கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான களுத்துறை மாவட்டம் – சஞ்சீவ எதிரிமான்ன கண்டி மாவட்டம் – வசந்த யாப்பா பண்டார மாத்தளை மாவட்டம் ...

Read More »

கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?

இயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன். பொதுவாக அதிகம் சமூகவலைதளங்கள் ...

Read More »

இலங்கையில் அங்கீகாரமளிக்கப்பட்ட சிம் அட்டைகளுக்கே அனுமதியாம் !

இனிவரும் காலங்களில் மக்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீககாரம் அளிக்கப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் சிம் அட்டைகள் உள்ளிட்ட தொடர்பாடல் சேவைகளையே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறல்லாத பட்சத்தில் அவர்களின் தொடர்பாடல் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்விடயம் குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இனிவரும் காலத்தில் மக்கள் தமது தேவைகளுக்கென சிம் அட்டைகள் மூலமான தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் போது, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ...

Read More »

ஒற்றுமை என்பது செயலில் வரவேண்டும் – கஜேந்திரகுமார்

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளின் பின்னர், ஒற்றுமைக்கான கோசங்களை விக்கினேஷ்வரன் அவர்களும் சுமந்திரன் அவர்களும் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அழைப்பில் பல சந்தேகங்கள் இருக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் வானொலி ஒன்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது: உண்மையான ஒற்றுமைக்கான அழைப்பு எனின், கொள்கை அடிப்படையில் தங்களை திருத்திக்கொண்டு அந்த அழைப்பை விடவேண்டும். ஆனால் வெறுமனே மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ் மீது சற்றுமுன் வாள்வெட்டுத் தாக்குதல். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »

எல்லா கதாநாயகர்களும் அதிரடி கதாநாயகனாக வேண்டும் என்று விரும்புவார்கள்

தமிழில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால், ‘அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், அது சுத்தப்பொய்’ என்று கூறியிருக்கிறார். ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருபவர், விஷ்ணு விஷால். ‘ராட்சசன்’ படத்தின் மூலம் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராகி விட்டார். அந்த படத்தின் வெற்றி, விஷ்ணு விஷாலின் ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயரே தூக்கிப் பிடித்தது. பெரும்பாலான இளம் கதாநாயகர்களுக்கு உள்ள ஆசை இவருக்கும் வந்து இருக்கிறது. ஒரு அடிதடி படத்தில் ...

Read More »

புதிய அமைச்சரவை பதவியேற்பு !

இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் இம்மாதம்12 ஆம் திகதி கூடவுள்ளது. கண்டி திருமண மண்டபத்தில் அமைச்சரவை பதவி யேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது. இதில் 26 அமைச்சர் கள் உள்ளடக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி, வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. கல்வி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சமல் ராஜபக்ஷ நீர்ப்பாசன அமைச்சராகவும், நாமல் ராஜ பக்ஷ ...

Read More »

எமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும்

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ...

Read More »