குமரன்

அவுஸ்திரேலியாவிலிருந்து குடும்பத்துடன் நாடு கடத்தப்பட உள்ள மாணவி!

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் நாடு கடத்தப்பட உள்ள இந்திய வம்சாவளியினரான ஒரு மாணவி, புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு தெரிவிக்கும் ஒரு செய்தியாக பிரபல அவுஸ்திரேலிய பாடல் ஒன்றை பாடி நெகிழ வைத்தார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ராஜசேகரன் மாணிக்கம் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த நிலையில், தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பதற்காக 2103ஆம் ஆண்டு குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். தற்போது அவரது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை இல்லை என்பதால், அவருக்காக மருத்துவ செலவுகளை செய்ய இயலாது என்று ...

Read More »

தேசிய விருது பட்டியல் – புறக்கணிக்கப்பட்ட தமிழ் படங்கள்!

66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...

Read More »

லடாக்கில் தேசிய கொடி ஏற்றுகிறார் டோனி!

சுதந்திர தினத்தன்று லடாகில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை டோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி ராணுவ சேவையில் மிகுந்த ஈடுபாடு காட்டியதால் கடந்த 2011-ம் ஆண்டு அவருக்கு ராணுவம் சார்பில் கவுரவம் அளிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு சிறிது நாட்களுக்கு அவர் ராணுவ சேசவையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் ஆக்ராவில் பாராசூட்டில் இருந்து குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டு அதில் தேர்ச்சி பெற்றார். சுமார் 8 ஆண்டுகள் இடை வெளிக்குப்பிறகு தற்போது அவர் இந்திய கிரிக்கெட் ...

Read More »

யாழில் வீடு புகுந்து தாக்குதல்!

இதேவேளை, யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையத்தின் ஜன்னல் கதவுகள் மற்றும் இரும்புக் கதவுகள் என்பன நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து சேதம் ஆக்கப்பட்டுள்ளன என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.   குறித்த சம்பவம் தொடர்பில் சனசமுக நிலையத்தின் தலைவரினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.            

Read More »

சட்டமா அதிபரின் நடவடிக்கையை மன்னிப்புச் சபை வரவேற்பு!

திருகோணமலையில் 2006 ஜனவரியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சில சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் கூறியிருக்கிறது. இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 13 வீரர்களை, அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையென்ற காரணத்தைக் கூறி திருகோணமலை மேல் நீதிமன்றம் விடுதலை செய்தமையை அடுத்தே இந்த மீள் விசாரணைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ...

Read More »

66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டதில் சிறந்த தமிழ்ப்படமாக ‘பாரம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்‌ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. இந்தியில் அந்ததுன், மலையாளத்தில் சுடானி பிரம் நைஜீரியா, கன்னடத்தில் நதிசராமி படங்களுக்கு கிடைத்துள்ளது. ...

Read More »

புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்!

2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும். ‘நல்லாட்சி அரசாங்கம்’ நல்லாட்சியைத் தராவிட்டாலும், தமிழர்களுக்கு நல்வாழ்வைத் தருவார்கள் என்று, தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். ‘தீபாவளிக்குள் தீர்வு, ‘பொங்கலுக்குள் புதிய அரசமைப்பு’ என்று ‘புலுடா’க்கள் தொடர்ந்தன. இன்று, புதிய அரசமைப்புக்கான வாய்ப்பு, முழுமையாக இல்லாது போய்விட்டது. புதிய அரசமைப்பின் சாத்தியமின்மையை, இலங்கை அரசியலைப் புரிந்தவர்கள், இலகுவாக அறிந்து கொள்வர். நல்லாட்சி அரசாங்கம், தனது முதலாவது ஆண்டில் பயணித்த திசையே, புதிய அரசமைப்பைக் ...

Read More »

காஜல் அகர்வாலுக்கு கட்டுப்பாடு விதித்த ‌ஷங்கர்!

இந்தியன் 2-வில் எனது கதாபாத்திரம் பற்றி பேட்டிகளில் தெரிவிக்ககூடாது என இயக்குனர் ‌ஷங்கர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இந்தியில் ஹிட்டான குயின் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. சென்னை வந்த காஜல் அளித்த பேட்டி: சூப்பர் ஹீரோ படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க தான் காத்திருக்கிறேன். நமது நாட்டிலும் அதுபோன்ற படங்கள் விரைவில் தயாராகும் என்ற நம்பிக்கை உள்ளது. பாரிஸ் ...

Read More »

13 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் ஷில்பா ஷெட்டி

தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் நடிக்கவுள்ளார். தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா, விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவர் 2007ஆம் ஆண்டு அப்னே படத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்  நடிக்கவுள்ளார். . நிக்கம்மா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கபீர் கான் ...

Read More »

‘ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே புதிய கூட்டணி’!

ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read More »