தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கவுள்ளார்.
தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா, விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவர் 2007ஆம் ஆண்டு அப்னே படத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நடிக்கவுள்ளார். . நிக்கம்மா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கபீர் கான் இயக்குகிறார். தற்போது தனது கதாபாத்திரத்திற்காக ஷில்பா தயாராகி வருகிறார். படம் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
’விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளேன். தற்போது தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த செயல்முறையை மிகவும் ரசித்து செய்து வருகிறேன். இந்த திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறேன். ஒரு முறை நடிகராகிவிட்டால் அவர் எப்போதும் நடிகரே. அந்த சுவையை அறிந்தபின் அதிலிருந்து விலகியிருக்க முடியாது’ என்று ஷில்பா தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal