குமரன்

நியூசிலாந்து: மே 14-ம் திகதி முதல் உணவு விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் இயங்க அனுமதி

நியூசிலாந்தில் வரும் 14-ம் தேதி முதல் மால்கள், திரையரங்குகள், கஃபேக்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை திறக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆதர்ன் கூறும்போது, “ஊரடங்குத் தளர்வு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. உணவு விடுதிகள், கஃபேக்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் வியாழக்கிழமை முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிக் கூடங்கள் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. மதுபான விடுதிகள் மே 21 ஆம் தேதி திறக்கப்படும். பொதுமக்கள் 10 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களைத் ...

Read More »

கண்களின் மூலம் கரோனா பரவுமா?

கரோனா இன்று உலகமெங்கும் அனைவரையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. எந்நேரமும் கரோனா குறித்த செய்திகள்தாம். ‘கரோனா’ வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கண்களைப் பாதுகாப்பாக வைப்பது குறித்த தகவல்களை உலகெங்கும் உள்ள கண் மருத்துவச் சங்கங்கள் வெளியிட்டு வருகின்றன. கண்ணில் சிவப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டுமா ? ‘மெட்ராஸ் ஐ’ என்று சொல்லப்படும் கண்வலி ‘அடினோ’ வைரஸால் ஏற்படக்கூடியது. இதுபோன்ற கண்சிவப்பு ‘கரோனா’ வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்குமா என்பது சிலரது சந்தேகம். ஒரு வேளை சிவப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டுமா என்றும் கேட்கிறார்கள். ...

Read More »

ஊரடங்கை மையப்படுத்தி குறும்படம் இயக்கிய சுகாசினி

கொரோனா ஊரடங்கு நிகழ்வுகளை மையப்படுத்தி, வீட்டில் இருந்தபடியே ஐபோனில் குறும்படம் ஒன்றை சுகாசினி மணிரத்னம் இயக்கி உள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் இந்திரா என்கிற படத்தை இயக்கிய நடிகை சுகாசினி, இந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். சின்னஞ்சிறு கிளியே என்கிற இந்த குறும்படத்தில் மலையாள நடிகை ஆகானா கிருஷ்ணா, கோமளம் சாருஹாசன், கிருஷ்ணன் ஆகியோருடன் தானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுஹாசினி. எந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியோ லைட்டிங் வசதிகளோ இல்லாமல் ஐ போன் மூலமாக இந்த குறும்படத்தை ...

Read More »

லாக்டவுனில் களரி பயிற்சி மேற்கொள்ளும் அதிதி ராவ்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் அதிதி ராவ், தற்போது களரி பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, குப்சுரத், பத்மாவத் உட்பட பல படங்களில் நடித்தவர் அதிதி ராவ். மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். பின்னர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். இப்போது விஜய் ...

Read More »

கூட்டமைப்பின் புதிய வியூகம்

அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், பங்கேற்றதன் மூலம், தற்போதைய அரசாங்கத்துடனான புதியதொரு உறவுக்கு களம் அமைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கடந்த 4ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும், அலரி மாளிகையில் ஒரு கூட்டத்துக்கு அழைத்திருந்தார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்த ஏனைய எதிர்க்கட்சிகள், மகிந்த ராஜபக்சவின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம், நாடாளுமன்றத்தைக் ...

Read More »

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி – இயான் சேப்பல் பாராட்டு

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் இயான் சேப்பல் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி இருப்பதால் இந்த ...

Read More »

மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவு நனவாகிறது

மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்க, ஒரே போன் காலில் விஜய் – அனிருத்திடம் லாரன்ஸ் சம்மதம் வாங்கி உள்ளார். மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் அவரை வாழ்த்தி இருந்தார். இதனிடையே லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “அந்த இளைஞர் பெயர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருப்பவர். இந்த லாக்டவுன் சமயத்தில் 3 நாட்கள் ...

Read More »

வடகொரியாவுக்கு கொரோனா அச்சுறுத்தல்! -சீனா கவலை

கொரோனா வைரசை எதிர்த்து போராட வடகொரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய சீனா தயாராக இருப்பதாகவும் ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து, அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருந்தாலும் சீனாவின் அண்டை நாடான வடகொரியாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்திலேயே வடகொரியா, தனது எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு தடைவிதித்தது. இதன் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 272 பேர் சிறிலங்கா திரும்பினர்

அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த 272 பேர் இன்று (10) அதிகாலை சிறிலங்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

Read More »

பொதுத் தேர்தலுக்கு தடை உத்தரவு கோரும் முதல் மனு விசாரணை நாளை

ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை நாளைய தினம் இடம்பெறவுள்ளது. மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளது. குறித்த நீதிபதிகள் குழாமுக்கு நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா தலைமை தாங்குவார். அத்துடன் நீதிபதிகள் குழாமில் எஸ்.துரைராஜா மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர். எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் ...

Read More »