குமரன்

இறக்குமதி செய்யப்படும் 26 உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 26 ; உணவுப் பொருட்களுக்கு வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி ,பருப்பு, செத்தல் மிளகாய்,வெள்ளைப்பூண்டு, கிழங்கு, டின் மீன், பேரீச்சம்பழம் உள்ளிட்ட 26 பொருட்களுக்கே வர்த்தகவரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழங்கிக்காக விதிக்கப்பட்டிருந்த விலை 25 ரூபாவிலிருந்து ; 50 ரூபாவாகவும் வெள்ளைப்பூடு 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவுக்கும், செத்தல் மிளகாய் 25 ரூபாவிலிருந்து 100 ரூபாவாகவும், மைசூர் பருப்பு 7 ரூபாயிவிலிருந்து 10 ரூபாவுக்கும், ...

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகளை சீர்குலைக்க முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும் சிலர் இதனை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய பேராயர் மேலும் தெரிவித்ததாவது அதிகாரமுடைய ஸ்தானத்திலிருந்து கொண்டு இவ்வாறு செயற்படுபவர்கள் அவர்களுக்கு எவ்வாறு வாழ்வதற்கான உரிமை இருக்கின்றதோ அதே போன்ளுறு போது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிழிரழந்தவர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை இருந்தது. ஆனால் ...

Read More »

வடக்கு மாகாண சுகாதாரதுறைக்கு வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

வட மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு மாகாண சுகாதாரத்துறையில் காணப்படுகின்ற சாவால்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளார் வடமாகாணத்தில் காணப்படும், மாவட்ட பொது வைத்தியாசலைகள், பிரதேச வைத்தியசாலைகள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் ...

Read More »

மாஸ்க் விதிமுறைகள்: இங்கிலாந்து அரசு உத்தரவை எதிர்த்து இந்திய வைத்திய தம்பதியர் வழக்கு

இங்கிலாந்தில் பயன்படுத்திய சுய பாதுகாப்பு கவசங்களை மீண்டும் பயன்படுத்த சொல்லி உயிருக்கு உலை வைக்கும் அரசு உத்தரவை எதிர்த்து இந்திய வைத்திய தம்பதியர் வழக்கு தொடருகின்றனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அங்கு இதுவரை அந்த வைரஸ் தாக்குதலுக்கு 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆளாகி இருக்கிறார்கள். 36 ஆயிரத்துக்கும் மேலானோர் உயிரிழந்தும் இருக்கிறார்கள். அங்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இந்திய டாக்டர்கள் பலரும் முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அங்கு சிக்கன நடவடிக்கையாக, பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற ...

Read More »

இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்?

இலங்கைத் தீவை பிரிப்பது யார் விக்கி கேள்வி ? வடக்கிற்கு ஒரு சட்டம் தெற்கிற்கு ஒரு சட்டம் என்கிறார் தமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றது. நீதித்துறையின் சட்டம் கூட இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுகின்றது. நினைவு கூரல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொரோன தனிமைப்படுத்தல் விதி முறைகள் பாய்கின்றன. ஆனால், ; தென் இலங்கையில் ; யுத்த வெற்றி விழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் ...

Read More »

முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்திற்கு நீதி வேண்டும் !

விடுதலைப்புலிகளை பேரினவாத அரசுகள் பயங்கரவாதிகளாகவும் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவுமே கருதுகின்றன. அந்த அடிப்படையில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு உள்ளுர் மற்றும் சர்வதேச இராணுவ ஒருங்கிணைவு ஒன்றின் மூலம் ஆயுத ரீதியாக அடக்கப்பட்டார்கள். தோல்வியடையச் செய்யப்பட்டார்கள். பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்டிருந்தாலும்கூட, இலங்கையை இரண்டாகப் பிரிப்பதற்காகவே அரச படைகளுடன் ஓர் ஆயுத மோதலில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஏற்றுக்கொண்டிருந்தன. சர்வதேசமும் அதனை ஒப்புக்கொண்டிருந்தது. இதனால்தான் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்ற அதேவேளை, பிரிவினைவாதிகள் என்றும் ...

Read More »

இந்த அன்புக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் இந்த அன்புக்கு ரொம்ப கடமை பட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். மேலும் இவர் மகாநதி படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ...

Read More »

இரண்டு நாள்கள் இலங்கை முழுவதும் ஊரடங்கு அமுல்

எதிர்வரும் 24ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதி ஆகிய நாள்களில் இலங்கை  முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் நாளை (23) இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் 26ஆம் திகதி அதிகாலை 05 மணிக்கு நிக்கப்படும். கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வழமை போன்று ஊரடங்கு அமுலில் இருக்கும்.

Read More »

ராணாவின் நிச்சயதார்த்தம்…. திருமணம் எப்போது தெரியுமா?

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராணாவின் நிச்சயதார்த்தம் நேற்று எளிமையான முறையில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்தார். அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் ...

Read More »

வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை – நியூசிலாந்து பிரதமர் ஆதரவு

வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு தெரிவித்துள்ளார். நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசை அந்நாட்டில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். 5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில் கொரோனாவால் 21 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு ...

Read More »