வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசை அந்நாட்டில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில் கொரோனாவால் 21 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை, மற்ற 3 நாட்கள் விடுமுறை என்ற யோசனைக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், வாரத்தில் 4 நாள் வேலை வேண்டும் என நிறைய பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வாரத்தில் 3 நாள் விடுமுறை என்பது நீண்ட விடுமுறையாகும். இதனால் நியூசிலாந்து மக்கள் நாடு முழுவதும் அதிகம் பயணிக்க வழி கிடைக்கும். தற்போது நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை உயர்த்த இது வழிவகுக்கும் என பதிவிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal