நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையின் கரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர் கண்ணெதிரே கரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்றி அவர் தன் முடிவைத் தானே தேடிக்கொண்டார் என்ரு லோர்னா பிரீனின் தந்தை டாக்டர் திலீப் பிரீன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். அமெரிக்க கரோனா பலி எண்ணிக்கை 59,000த்தைக் கடந்துள்ள நிலையில் நியூயார்க்கில் மட்டும் 17,500 பேர் கரோனாவுக்குப் ...
Read More »குமரன்
சூர்யாவின் அறிக்கை சிறப்பு!
அன்பை விதைப்போம் என்ற பெயரில் நேற்று நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு என டுவிட் செய்துள்ளார். சென்னையில் நடந்த விருது விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தாலும், தொடர்ந்து ஆதரவும் பெருகி வருகிறது. இதனிடையே ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டார் சூர்யா. அந்த அறிக்கையில், ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக ...
Read More »சிறிலங்காவின் ஊரடங்கு நிலவரம்!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த 21 மாவட்டங்களிலும் நேற்றிரவு இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த மாவட்டங்களில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ...
Read More »வில்லன் பட அனுபவத்தை கூறிய மீனா
தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, அஜித்துடன் வில்லன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் ஆகிய படங்களில் மீனா நடித்தார். இதில் வில்லன் படத்தில் அவர் 2 வது கதாநாயகியாக நடித்தார். இந்த படம் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதை பார்த்ததும் மீனாவுக்கு வில்லன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த விஷயங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்ற அடிச்சா நெத்தி அடியா அடிப்பேன் பாடலுக்கு நடனமாடிவிட்டு, மறுநாள் படுக்கையில் இருந்து எழக்கூட ...
Read More »சிறிலங்கா இராணுவத்தால் மாற்றுத்திறனாளியான மாணவிகள் சாதனை!
போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர். முல்லைத்தீவு – முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த தண்ணீரூற்று மேற்கு, முள்ளியவளையில் வசிக்கும் கெங்காதரன் பவதாரணி, நாவலர் வீதி, முள்ளியவளையில் வசிக்கும் மதியழகன் விதுர்சிகா ஆகிய மாணவிகள் இருவரே இவ்வாறு சாதித்துள்ளனர். 2009ம் ஆண்டு இருவேறு சம்பவங்களின் போது காயமடைந்திருந்தனர். இவர்களில் பவதாரணி முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் சிக்கி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் எழுந்து நடமாட முடியாமல் ...
Read More »‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’
விழாவில் கோயிலைப் பற்றி ஜோதிகா பேசிய கருத்துக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து விமர்சித்தார். இதற்கு பல கண்டனங்களும் ஆதரவும் எழுந்தது. இதுகுறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ...
Read More »வடகொரியா தலைவர் நலமாக இருக்கிறார் என்கிறார் தென்கொரிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர்!
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் உயிருடனும், நலமாகவும் இருப்பதாக தென்கொரிய வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் தெரிவித்துள்ளார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை என்பதால் அவரது உடல்நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. வடகொரியாவின் ரெசார்ட் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கிம் ஜாங் அன்னின் சிறப்பு ரெயில் நிறுத்தப்பட்டிருக்கும் ...
Read More »யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9A
2019ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 26 மாணவர்கள் 9 பாடங்களிலும் திறமைச்சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 250 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்கள், 250 பேரும் சித்தியடைந்து, கல்லூரிக்கு 100 வீதம் சித்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். 26 மாணவர்கள் 9 ஏ பெற்றுள்ளதுடன், அவர்களில் தமிழ் மொழி மூலம் 12 பேரும் ஆங்கில மொழி மூலம் 14 பேரும் அடங்குகின்றனர். 29 மாணவர்கள் ...
Read More »யாழ்.வேம்படியில் 58 மாணவிகளுக்கு 9A
நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். 2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர். அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் ...
Read More »30 முதல் 50 வயதினருக்கு கரோனா பாதி்ப்பால் முக்கிய உள்ளுறுப்புகள் பாதிக்கும்;ஸ்ட்ரோக்கால் மரணம் ஏற்படும்!
கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தினால் நீரிழிவு நோய், இதயக்கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால நோய் பாதிப்புகள் இருப்போர், முதியோர் ஆகியோருக்குத்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் என கருத்து நிலவி வந்தது ஆனால் சமீபத்திய அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வில் 30 வயது முதல் 50 வயதுக்குள் இருப்போர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகினால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். சிலர் ஸ்டோரோக்கால் திடீரென எதிர்காலத்தில் உயிரிழப்பைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர் இதில் தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியிலும்கூட, ...
Read More »