தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை நேசித்த மற்றுமொரு மருத்துவ போராளி மண்ணை விட்டு பிரிந்துள்ளார். விடுதலைப்போராட்டத்தில் சுமார் இரு தசாப்தங்களாக மருத்துவ போராளியாக பணியாற்றிய மருத்துவர் அருள் நேற்று மண்ணை விட்டு பிரித்துள்ளார். மருத்துவ போராளியான அருள் என்றழைக்கப்படும் இராசையா யதீந்திரா போராளிகளினதும் மக்களினதும் இறுதி யுத்தம் வரையாக உயிரைக் காத்த ஒரு மருத்துவன் என நண்பர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். போரின் பின்னான தன் அமைதியான வாழ்க்கை போலவே அமைதியாக அவர் விடைபெற்றுக் கொண்டு விட்டார் என அவருடன் கூட பயணித்த போராளிகள் நிiவுகூர்கின்றனர். விபத்தொன்றில் காயமடைந்த மருத்துவர் ...
Read More »குமரன்
மாகாண சபையை எங்கிருந்து திட்டமிடுவது?
மாகாணசபைத்தேர்தல்களை அரசாங்கம் நடத்தினால் இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தரப்பு பலவீனமான பெரும்பான்மையைத்தான் பெறலாம் என்ற கணிப்பு பரவலாக உண்டு. கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் தேசிய கட்சிகள் வாக்குகளை மூன்றாக உடைக்கும். தவிர பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும் வாக்குகளைப் பிரிப்பார்கள். இவ்வாறாக தமிழ்வாக்குகள் அங்கே ஆறுக்கும் மேற்பட்ட தரப்ப்புக்களால் பிரிக்கப்படும் ஆபத்து உண்டு. இது ஒரு பலமான பெரும்பான்மையை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தும். இதனால் முஸ்லிம்களோடு இணைந்துதான் ஆட்சியை நடத்த வேண்டி இருக்கும் என்ற கணிப்பு பலமாக ...
Read More »விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை விஜயதாச ராஜபக்ச விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறான விவகாரங்களை கையாள்வதற்கு பொதுஜனபெரமுனவிற் கு ஒரு முறையுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த முறையை பின்பற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார். விஜயதாச ராஜபக்சவின் அரசியல் வரலாறும் நடத்தைகளும் மக்கள் நன்கு அறிந்த விடயம் என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Read More »அலெக்சி நவால்னி எந்த நேரத்திலும் உயிரிழக்ககூடும்
புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானார். ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்சி நவால்னி(44). ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானார். ...
Read More »படம் இயக்க தயாராகி வந்தார் விவேக்…..
கொரோனா காலம் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று விவேக்கிடம் வாக்குறுதி கொடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக், கடந்த 1987-ம் ஆண்டில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் எல்லா கதாநாயகர்களின் படங்களிலும் நடித்தார். நகைச்சுவையுடன் சமூக சீர்திருத்த கருத்துகளை பேசி, பல படங்களில் நடித்து இருந்தார். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, பசுமை புரட்சிக்கு உதவினார். நகைச்சுவை படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால், கதாநாயகனாக மாறினார். ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற ...
Read More »“என் குழந்தைகளை பிரிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன!”-அலி
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பல ஆப்கான் அகதிகள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட போதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைப்பதற்கான விசாவைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக அல்லது அவ்விசாவைப் பெறுவதே சாத்தியமற்றதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து நான்கு மணிநேர பயணத் தூரத்தில் உள்ள ஸ்வான் ஹில் ஆஸ்திரேலியாவின் உணவுக் கிண்ணமாக வர்ணிக்கப்படுகிறது. பெருமளவிலான பாதாம் பருப்பும் திராட்சைகளும் தயாரிக்கக்கூடிய பகுதியாக இது இருக்கிறது. இப்பகுதியில் பெரும் உற்பத்தி நடக்கக்கூடிய காலங்களில், பல அகதிகள் உள்பட ...
Read More »விடுதலைப்புலிகள் அமைப்பு மீளுருவாக்க முயற்சி -புதுக்குடியிருப்பில் கைது!
பயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இன்று (17.04.2021) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணிய குறித்த குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 அகவையுடைய பாடசாலை வீதிவள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தரே இன்று அதிகாலை பயற்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு ...
Read More »விடுதலைப் புலிகள் அமைப்பு மீள் உருவாக்கம்! – யாழில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று சனிக்கிழமை அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை காவல் துறை பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் ...
Read More »மீறல்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாதத்தடை விதிமுறைகள்
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 11 அமைப்புக்கள் ‘தீவிரவாத அமைப்புக்களாக’ இனங்காணப்பட்டிருப்பதுடன் இதுபோன்ற அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது இதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ...
Read More »சுகாதார அமைச்சின் மீது அதிதிருப்தி
சுகாதார அமைச்சினால், 2006 ஆம் ஆண்டு 31.71 மில்லியன் ரூபா செலவில், கைவிரல் அடையாளத்தைப் பதிவுசெய்யும் 224 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோதும், 15 வருடங்களுக்கு மேலாக அவை செயலற்ற நிலையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவான கோப் குழுவில், இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில், கோபா குழு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், சுகாதாரத்துறை அபிவிருத்தி விரிவாக்கத் திட்டத்தின்கீழ், ஐந்து வருடங்களில் புத்தாக்கத் திட்டங்களை ஊக்குவிக்க, 346 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு ...
Read More »