குமரன்

எழுத்து கடிகாரம்!

நேரத்தை எழுத்துவடிவில் காட்டும் வித்தியாசமான கடிகாரம். பின்புற வண்ணத்தை மாற்றிக் கொள்ளுதல், நேரத்தை சத்தமாக படித்துக் காட்டுதல், அலாரம் போன்ற வசதிகளைக் கொண்டது.  லண்டனை சேர்ந்த லெட்பீ நிறுவனம் தயாரித்துள்ளது.

Read More »

கிணற்றிலிருந்து நீரைப்பெறுவதற்கு கடற்படையினருக்கு தடை!

ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது. ஊர்காவற்துறை பிரதேச சபை அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் ம.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஞா.லக்ஸ்மன் கடற்படையினர் பொதுமக்களின் பாவனையில் உள்ள நன்னீர் கிணற்றில் கடற்படையினர் நன்னீர் எடுப்பதனை தடை செய்ய வேண்டும் என கோரி பிரேரணையை முன் மொழிந்தார். குறித்த பிரேரணை சபையில் ஏக மனதாக ...

Read More »

தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா!

சட்ட விரோதமாக எல்லை தாண்டிச்சென்ற தென்கொரியரை விடுதலை செய்தது வடகொரியா. தென் கொரியாவை சேர்ந்தவர் சியோவ் (வயது 34). இவர் கடந்த ஜூலை மாதம் 22-ந் திகதி சட்ட விரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை நேற்று வடகொரியா விடுதலை செய்துவிட்டது. இது குறித்து தென்கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், “வடகொரியா இன்று (நேற்று) காலை 11 மணிக்கு நம் நாட்டைச் சேர்ந்த சியோவ் என்பவரை பான்முன்ஜோமில் ...

Read More »

மீண்டும் ஐ.நா வில் அரசாங்கத்தை காப்பாற்ற துடிக்கும் கூட்டமைப்பு!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடிமறைத்து, ஜ.நாவில் சிறிலங்கா அரசாங்கத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான சதி வேலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். ஜ.நாவின் கால அவகாசம் முடியும் நிலையில், இலங்கை விடயத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் எழுந்துள்ளது என்றும், அதனை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஊடகவியலாளர் ...

Read More »

கருணாநிதி – திருவாரூர் முதல் தலைநகர் வரை – வாழ்க்கை வரலாறு

திமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ...

Read More »

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்!

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானார். தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். 94 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்தது. சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது. இந்நிலையில் 27.07.2018 அன்று இரவு கருணாநிதிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து அன்று நள்ளிறவு 1.30 மணியளவில் ...

Read More »

பெப்சி நிறுவன அதிகாரி பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவிப்பு!

12 ஆண்டுகளாக பெப்சி குழும நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் குளிர்பான சந்தையில் கொடி கட்டி பறக்கும் பெப்சி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பெப்சி நிறுவன இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தலைவராக உள்ள லாகுவார்டா புதிய தலைமை செயல் ...

Read More »

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம்!

யாழ்.தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை மூடப்படும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளரான த.காண்டீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, ‘தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் 3 சிகிச்சை பிரிவுகள் உள்ளன. அவற்றில் தலா 6 வைத்தியர்கள் வீதம் 18 வைத்தியர்கள் இருக்கவேண்டும். ஆனால் 9 வைத்தியர்களே இருக்கிறார்கள். அவர்களிலும் 5 பேர் இப்போது இடமாற்றம் பெறவுள்ளனர். அதன் பின்னர் புற்றுநோய் வைத்தியசாலையில் 4 வைத்தியர்களே கடமையாற்றவுள்ளனர். ...

Read More »

சம்பந்தனே எதிர்கட்சி தலைவர்!

எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனே தொடர்ந்தும் பதவிவகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களின் சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீர கட்சியின் முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

Read More »

வடக்­குத் தொடர்­பாக பிறந்த திடீர் ஞானம்!

வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பாக அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்­களை வியக்க வைத்­துள்­ளது. இந்­திய அர­சின் நிதி­யு­த­வி­யு­டன் இடம்­பெற்ற நோயா­ளர் காவு வண்­டி­யின் இல­வச சேவைக்­கான ஆரம்ப நிகழ்­வின்­போது இதை அவ­தா­னிக்க முடிந்­தது. இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏனைய பிர­தே­சங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது வட­ ப­கு­தி­யில் அபி­வி­ருத்தி திட்­டங்­கள் இடம்­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்­லை­யெ­னக் கூறி­யுள்­ளார். இந்த நிகழ்­வில் காணொலி மூல­மாக உரை­யாற்­றிய இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, வட­ ப­குதி மக்­க­ளின் கண்­ணீ­ரைத் துடைத்து அவர்­களை வள­மான எதிர்­கா­லத்­துக்கு இந்­தியா ...

Read More »