ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார். ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ...
Read More »குமரன்
கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்!
வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கூகுள் நிறுவனம் ரூ. 7,600 கோடி அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுக்கு உலகெங்கும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனங்கள் எங்கெல்லாம் தங்கள் கிளைகளை வைத்திருக்கின்றனவோ, அங்கெல்லாம் அந்தந்த நாட்டின் விதிகளுக்கேற்ப வரிகளை செலுத்தவேண்டும். சில நாடுகளில் வரி குறைவாக இருக்கும். சில நாடுகளில் அதிகமாக இருக்கும். அப்படி அதிகப்படியான வரியை தவிர்க்க பெருநிறுவனங்கள் பல்வேறு வரி தவிர்ப்பு முறைகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கும் கூகுள் நிறுவனம் ...
Read More »கொடைக்கானலில் அடுத்த படத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ்!
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், அடுத்தாக தான் நடிக்கும் படத்தை கொடைக்கானலில் இருந்து தொடங்கி இருக்கிறார். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி, பேட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இவர் மேயாத மான், மெர்க்குரி போன்ற படங்களை ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இருந்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஈஷ்வர் ...
Read More »எனது வாழ்க்கை கதையில் நடிக்க யார் பொருத்தம்?
எனது வாழ்க்கை கதையில் சமந்தாவை விட பிரபல நடிகை நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் வாழ்க்கையை படமாக்க போட்டி நிலவுகிறது. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்றார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் ...
Read More »ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார் – மார்க் டெய்லர்
ஆஸ்திரேலிய அணியை மீண்டும் சுமித் வழிநடத்துவார் என்று முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டின்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கேப்டன் பதவியை இழந்ததோடு ஓராண்டு தடையை அனுபவித்தார். தடை காலம் முடிந்து கடந்த மார்ச் மாதம் அணிக்கு திரும்பினார். மேலும் ஓராண்டு காலம் அவருக்கு எந்த போட்டிகளிலும் கேப்டன் பதவி வழங்கப்படாது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது. இதன்படிபார்த்தால் ...
Read More »இளவரசியின் பாதத்தில் முத்தமிடும் படி பணித்த மெய்ப்பாதுகாவலர்கள்!
தொழிலாளியொருவரை மோசமாக தாக்கி அவமானப்படுத்துமாறு தனது மெய்ப்பாதுகாப்பாளர்களிற்கு உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்குள்ளான சவுதிஅரேபிய இளவரசி ஹசா பின்ட் சல்மான் அல் சவுடடிற்கு பிரான்ஸ் நீதிமன்றம் பத்துமாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்காகவே நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. 2016 செப்டம்பரில் பாரிஸில் உள்ள ஆடம்பர தொடர்மாடியில் நான் பணிபுரிந்துகொண்டிருந்த வேளை சவுதி இளவரசி தன்னை நான் படம்பிடித்து விட்டதாக தெரிவித்து தனது மெய்ப்பாதுகாவலர்களை என்னை தாக்குமாறு உத்தரவிட்டார் என அஸ்ரவ் எய்ட் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த ...
Read More »சீனாவின் கரம் மேலோங்கினால் இந்தியாவுக்கு கடுமையானதாக அமையும்!
தென்புலத்தில் சீனாவின் கரம் ஓங்கும் போது வடபுலத்தில் காணப்படக்கூடிய இந்திய – சீன எல்லையில் கடும் பதற்றம் ஏற்படும். எனவே தான் இலங்கையின் அரசியல் நிலைப்பாடு இந்தியாவுக்கு முக்கியமாகின்றது. அதற்காக குறுக்கீடுகள் தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. மறுபுறம் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போன்று இலங்கையில் மீண்டும் சீனாவின் கரம் மேலோங்குமாக இருந்தால் அதன் தாக்கம் இந்தியாவுக்கு கடுமையாக இருக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹுமான் தெரிவித்தார். இலங்கை என்பது இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு மிகவும் நெருக்கமான நாடாகும். ...
Read More »ரணிலை சந்தித்த கனிமொழி உள்ளிட்ட இந்திய அரசியல் முக்கியஸ்தர்கள்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தி.மு.க துணைத்தலைவர் கனிமொழி உட்பட இந்தியாவின் சில முக்கிய அரசில் தலைவர்கள் பிரதமரை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் , இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் ...
Read More »தடைகளை தாண்டி வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தின் இறுதி நாள் பூஜை!
நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கபட்டதுடன் ஆலயவளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் காவல் துறையால் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய வருடாந்த பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் விசேட ...
Read More »தனுஷுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ்!
தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட நடிகர்களான தனுஷும், ஜிவி பிரகாஷும் தங்களுடைய படங்கள் ரிலீஸ் மூலம் மோத இருக்கிறார்கள். நாகசைதன்யா – தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `100 சதவீதம் லவ்.’ இந்த படம் `100 சதவீதம் காதல்’ என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது. சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்’ விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ...
Read More »