இலங்கையின் தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் விவகாரம் இப்போது முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாக இருப்பதால், கலப்பு பிரதிநிதித்துவ முறைமை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் ஆரம்பத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்த தொகுதிவாரி தேர்தல் முறைமையை தனது வசதி கருதி, 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முற்றாகவே இல்லாமல் செய்திருந்தார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அப்போது பாராளுமன்றத்தில் பெற்றிருந்த அசுர பலத்தைக் கொண்டு, எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தலையெடுக்க ...
Read More »Tag Archives: வீரகேசரி
அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா முள்ளிவாய்க்கால்?
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த முல்லைத்தீவின், முள்ளிவாய்க்கால் கரையோரத்தில், முதல் முறையாக ஒரு சர்வதேசப் பிரமுகர், போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இம்மாதம் முதல்வாரம், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியே, முள்ளிவாய்க்காலில் மலர் அஞ்சலி செலுத்திய முதல் சர்வதேசப் பிரமுகராவார். இவர் முள்ளிவாய்க்கால் கரையோரமாக நடந்து சென்று, விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு, தரைதட்டி நின்ற பாரா-–3 என்ற கப்பலின் எச்சம் இன்னமும் காணப்படும், பகுதியை அண்டிய கடற்கரையில் ...
Read More »அம்பாறை தனிமாவட்ட கோரிக்கை – இருபக்க கருத்துகள்
முஸ்லிம் காங்கிரஸ் வேண்டி நிற்கும் அம்பாறை மாவட்டத் தமிழ்பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கை தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபை இணைப்பாளரின் கட்டுரையையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கருத்தினையும் வீரகேசரி பத்திரிகையிலிருந்து மீள்பதிவிடுகின்றோம். தமிழ்மக்களின் கருத்து தற்போதுள்ள அம்பாறை நிர்வாக மாவட்டத்தில் அம்பாறைத் தேர்தல் தொகுதி நீங்கலாக மீதியான பொத்துவில், கல்முனை, சம்மாந்துறைத் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிப் புதிதாகக் ‘கல்முனை மாவட்டம்’ என்ற முஸ்லிம் பெரும்பான்மைக் கரையோர மாவட்டம் ஒன்றினை உருவாக்கும் முயற்சி அதன் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் காலத்திலேயே ஸ்ரீலங்கா ...
Read More »தென்னமரவடி மக்களின் மீள்குடியேற்றம்? – திருமலை நவம்
1984 ஆம் ஆண்டு தென்னமரவடி மக்கள் இனச்சங்காரத்தால் 10 உயிர்களை பறிகொடுத்தார்கள். குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டன. நூற்றாண்டு காலமாக பாரம்பரியமாக வாழ்ந்த அக்கிராம மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய அவலத்துக்கு ஆளாக்கப்பட்டனர். கால் நூற்றாண்டு கால இடப்பெயர்வுக்கு பிறகு அந்த மக்கள் சொந்த ஊருக்குத் திரும்பியபோது வீடுகளிருக்கவில்லை. வயல்களும், வரம்புகளும் அயல் கிராமத்தவர்களால் கபளீகரம் செய்யப்பட்டிருந்தன. கனவுகளோடு திரும்பியவர்களுக்கு எஞ்சியிருந்தது தென்னமரவடி என்னும் நாமம் மட்டுமே. இவர்கள் சகல வசதிகளுடனும் மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். இவ்வாறு தெரிவித்தார் கிழக்கு மாகாண ...
Read More »