யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான அடக்குமுறைகளுக்கும் நெருக்குதல்களுக்கும் ஆளாகியிருந்த பத்திரிகை சுதந்திரம் இப்போது முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது. அதேவேளை, யுத்தத்தின் பின்னர் நிலைமாறு கால நீதி பற்றி பேசப்படுகின்ற சூழலில் இது போதிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை என்பதையும் மறுக்க முடியாது. இலங்கையின் பத்திரிகை சுதந்திரம் முன்னைய ஆண்டிலும் பார்க்க சிறிது முன்னேறியிருக்கின்றது என்பதை ஆர்.எஸ்.எவ் என்ற அமைப்பு, அகில உலகளாவிய தனது ஊடக சுதந்திர நிலைமை குறித்த வருடாந்த மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது. ஊடக சுதந்திரத் ...
Read More »Tag Archives: ஆசிரியர் முரசு
லலித் ஜெயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
யாழ்ப்பாணம்,புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட,சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மீண்டும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
Read More »