Tag Archives: ஆசிரியர்தெரிவு

அமெரிக்காவில் 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற காவல் துறை

கடந்த 11-ந்திகதி டான்ட் என்ற கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சிறுவனை காவல் துறை சுட்டுக் கொல்லும் காணொளி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவனை காவல் துறையினர்   சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த காணொளி 2 வாரம் கழித்து காவல் துறை வெளியிட்டுள்ளனர். அந்த காணொளி காரில் இருந்து இறங்கும் காவல் துறை அதிகாரி ஒருவர், ஆடம்டோலிடோ என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்கிறார். பின்னர் சிறுவனை ...

Read More »

யாழில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல் துறையின்  கட்டுப்பாட்டை மீறி வாகனத்தில் பயணித்ததன் காரணமாக இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபட முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்போம் – சுமந்திரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 30.01.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அன்று வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் ...

Read More »

நீண்ட போரை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம்!

அமெரிக்காவின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களை திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கூறும்போது, “ எங்கள் படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது” என்று தெரிவித்துள்ளார். ...

Read More »

4 காவல் துறையை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு காவல் துறை வாகனத்தின் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48).‌ இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் திகதி விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் உள்ள நெடுஞ்சாலையில் மொஹிந்தர் சிங், தனது லாரியில் சென்று கொண்டிருந்தார். ...

Read More »

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு தேவை

இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (15) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் ...

Read More »

ஆட் கடத்தல் குறித்து விசாரணை நடத்த அவுஸ்திரேலியாவிலிருந்து ட்ரோன் கொமராக்கல்

அவுஸ்திரேலியாவில் இருந்து 5 அதிநவீன ட்ரோன் கொமராக்கல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் மனித கடத்தலை தடுப்பதற்காக இவ்வாறு ட்ரோன் கமராக்கல் வழங்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே பல்வேறு நாடுகளுக்கு இவ்வாறு ட்ரோன் கமராக்கல் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமையவே இவ்வாறு ட்ரோன் கமராக்கல் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை தளபதி ரியர் அட்மிரல் மார்க் ஹில் தெரிவித்துள்ளார். இவ்வாறான ட்ரோன் கமராக்கல் ஆட் கடத்தலை தடுக்க பெரும் உதவியாக அமையும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Read More »

அரசாங்கத்துடன் பேசுவதால் எந்த தீர்வையும் காணமுடியாது!

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515 ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வருடப்பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், கடந்த 2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.  ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, ; இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம். எந்தவொரு தீர்வையும் அடைய ...

Read More »

ஈழம், முஸ்லிம் விவாகச் சட்டடம் போன்ற சொற் பதங்களை அரசாங்கம் ஏன் பயன்படுத்துகிறது?

முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது. ஈழம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தி அரசாங்கம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது. தேசப்பற்று ; என்பது ; வெறும் தேர்தல் கால பிரசாரமாகவே காணப்படுகிறது என முன்னிலை சோசலிச கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். “முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ | Virakesari.lk” முன்னிலை சோசலிய கட்சியின் காரியாலயத்தில் ; ...

Read More »

புதிய புனர்வாழ்வு வர்த்தமானியை தடைசெய்யக் கோரி உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்

அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட ; அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட நிலையில், அந்த வர்த்தமானிக்கு ; தடை கோரி உயர் நீதிமன்றில் ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ; தாக்கல் செய்யப்பட்டுள்ளன நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில் இந்த 5 மனுக்களும் ; இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வர்த்தமானியானது, அரசியலமைப்பின் 3 ஆவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக கூறியே ...

Read More »