ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகத்தைக் காணுவதற்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது. “இந்த சுதந்திரம் அற்புதமாக உள்ளது. ஆனால் எனது வாழ்க்கையின் எட்டு ஆண்டுக் காலத்தை நான் இழந்திருக்கிறேன்,” என செல்வராசா கூறியுள்ளார். அதே சமயம், சுமார் 100க்கும் மேற்பட்ட அகதிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். தனுஷ் செல்வராசாவைப் பொறுத்தமட்டில், மனுஸ்தீவில் செயல்படும் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் சுமார் 6 ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
காரைநகர் காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது!
காரைநகர் நீலங்காடு பகுதியில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க எடுத்த முயற்சி ; காணி உரிமையாளர்கள், அரசியவாதிகள் இணைந்து காணியை அளக்க வந்த நில அளவை திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டம் நடத்தியதால் ; காணி சுவீகரிப்பு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறித்த பகுதியில் ஜே.45 பிரிவுக்கு உட்பட்ட 67 பேருக்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படை தமது தேவைகளுக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் படி குறித்த காணிகளை அளவிடும் பணிகளுக்காக நில அளவை திணைக்களத்தினர் வருகை தந்த போது ...
Read More »பளையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்க நடவடிக்கை
பளைப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளைச் சீன நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள வர்த்தகர்களுக்கும் வழங்கும் நடவடிக்கையை கோத்தபாய அரசு மேற்கொள்கிறது. இதற்காகவே, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- பளைப் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணியுள்ளது. அந்தப் பகுதியில் சீன நிறுவனத்துக்கும், ...
Read More »யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் இறுக்கமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்குக!
யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19 நிலைமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடத்தலாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ். பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், பட்டமளிப்பு நிகழ்வை கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துமாறுகோரி, அந் நடைமுறைகளைப் பட்டியலிட்டு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு நேற்று ...
Read More »கடும் பனிப்பொழிவால் திணறும் டெக்சாஸ்… மின்சாரம் இன்றி 34 லட்சம் மக்கள் தவிப்பு
டெக்சாஸ் மாநிலத்தில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, மின் கட்டமைப்பு முடங்கி உள்ளதால், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன. நீர்வீழ்ச்சிகளும் பனி சிற்பங்களாக உறைந்து காணப்படுகின்றன. குளிர் அதிகரிப்பதால் மின்சார தேவை அதிகரித்து உள்ளது. ஆனால், பனிப்பொழிவால் மின் கட்டமைப்பு முடங்கி உள்ளதால், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, கடந்த ...
Read More »ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: கடும் போராட்டத்திற்குப்பின் ரபேல் நடால் தோல்வி
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் காலிறுதியில் கடும் போராட்டத்திற்குப்பின் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் தலைசிறந்த வீரரும், 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், 4-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை ரபெல் நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டையும் 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் நடால் எப்படியும் வெற்றி ...
Read More »கேள்வி எழுப்பிய சுவிற்சர்லாந்து தூதுவர் – விக்னேஸ்வரன் வழங்கிய பதில் என்ன?
அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளே தற்போது தமிழர்கள் முஸ்லீம்கள் மலையகதமிழர்கள் கத்தோலிக்கர்களை ஐக்கியப்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகள் தொடரும் வரை இந்த ஐக்கியப்படுதலும் தொடரும் என குறிப்பிட்டுள்ளார் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பேர்கலருடனான சந்திப்பின்போது விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலருடன் முதற் செயலாளர், அரசியல், சிடோனியா கேபிரியல் அத்துடன் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன் மூவரும் என்னை வந்து சந்தித்தார்கள். திய சுவிஸ் ...
Read More »திருகோணமலை துறைமுகம் யாருக்கு?
யாழ் தீவுகளில் சீன மின் திட்டம் தொடர்வதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது. இவ்விடயத்தில் நிச்சயம் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும். இலங்கை மீது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா வித்தானகே தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தையும் இந்தியாவிற்கு அல்லது வேறொரு நாட்டுக்கு வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷா வித்தானகே தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் ...
Read More »ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதி மரணம்
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற சோமாலியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உயிரிழந்துள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. சோமாலிய நாட்டுப் பின்னணிக் கொண்ட அப்துல் ரஹ்மான் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகவும் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்பட்ட மனுஸ் தீவில் வாழ்ந்துவந்த இவர் அங்கிருந்து நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்டு பின் அங்கிருந்து ஆஸ்திரேலியாவின பிரிஸ்பேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். அதன் பின் பெர்த் பகுதிக்கு அனுப்பப்பட்டநிலையில் அங்குவைத்து அவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது. கடந்த ...
Read More »றுவாண்டா இனப்படுகொலை புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான றுவாண்டாவில் 1994ஆம் ஆண்டில் நிகழ்ந்த துட்சி இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம் என்று பிரான்ஸின் அன்றைய பிரான்ஷுவா மித்ரோன் அரசுஅங்குள்ள தனது விசேட பிரதிநிதிக்கு ரகசியமாக உத்தரவிட்டது. இதனை நிரூபிக்கின்ற பழைய ரகசிய தந்திப் பிரதி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்ற தகவலை பிரான்ஸின் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 1994 இல் றுவாண்டா படுகொலைகள் நிகழ்ந்த கையோடு பிரான்ஸ் அங்கு மேற்கொண்ட மனிதாபிமானப் படை நடவடிக்கைக்குப் பெயர் ‘ஒப்ரேஷன் றுக்கைய்ஸ்’. 1994 ஜூனில் இனப்படுகொலைகள் ...
Read More »