ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனத்தின் F3 லைட் ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போனின் ரீபிரான்டு பதிப்பான ஒப்போ F3 லைட் VND 5,490,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ A57 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஒப்போ A57 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டது.
ஒப்போ F3 லைட் சிறப்பம்சங்கள்:
– 5.2 இன்ச் எச்டி, 720×1280 பிக்சல் எல்சிடி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ்
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
– அட்ரினோ 505 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கலர் ஓ.எஸ். 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2 அப்ரேச்சர், PDAF, எல்இடி பிளாஷ்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 2900 எம்ஏஎச் பேட்டரி
4ஜி எல்டிஇ, GPRS/EDGE, ப்ளூடூத் 4.1, வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் நிறைந்த ஒப்போ F3 லைட் ஸ்மார்ட்போனின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ F3 லைட் மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.