நோக்கியா 9 ஸ்மார்ட்போன் வெளியீடு சார்ந்து எச்எம்டி குளோபல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய ஸ்மாபர்ட்போனின் ரென்டர் வீடியோ வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிய கேப்சியூல் பிரைமரி கேமரா வடிவைப்பு, எல்இடி பிளாஷ் லைட் உள்ளிட்ட அம்சங்கள் மற்றும் பிரைமரி கேமராவின் கீழ் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டூயல் வளைந்த ஸ்கிரீன், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை காணப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 9 சாதனத்தில் 5.5 இன்ச் QHD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் வெளியீடு சார்ந்து எவ்வித தகவலும் வழங்கப்படாதவில்லை.
சமீபத்தில் எச்எம்டி குளோபல் அறிமுகம் செய்த நோக்கியா 8 விற்பனை துவங்க இருக்கிறது. இந்தியாவில் நோக்கியா 8 விலை ரூ.35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் மட்டும் விற்பனைக்கு வரும் நோக்கியா 8 க்ரோமா, ரிலையன்ஸ், சங்கீதா மொபைல், பூர்விகா போன்ற ஆஃப்லைன் வர்த்தகர்களிடமும் விற்பனைக்கு வருகிறது.