அப்பிள் சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.0.3 வெளியீடு

ஐபோன், ஐபேட் சாதனங்களுக்கான ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6எஸ் சாதனங்களில் இருந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் வெளியிட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய அப்டேட்டில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சாதனங்களில் ஆடியோ மற்றும் ஹாப்டிக் ஃபீட்பேக் சார்ந்த பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் சில ஐபோன் 6எஸ் சாதனங்களில் ஏற்பட்ட தொடுதிரை சார்ந்த கோளாறுகள் சரி செய்யப்பட்டு பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் தரப்பு டிஸ்ப்ளேக்கள் வீடியோ தரவுகளின் தரத்தை குறைவாக பிரதிபலிக்கவோ, சீராக வேலை செய்யாமலோ போகலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் சாதனங்களை அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் மட்டும் சரி செய்ய வேண்டும் என்றும் நினைவூட்டியுள்ளது.

புதிய ஐ.ஓ.எஸ். 11.0.3 அப்டேட் 280 எம்பி அளவு கொண்டிருக்கிறது. எனினும் இதன் அளவு சாதனங்களுக்கு ஏற்ப வேறுபடலாம். புதிய அப்டேட் ஓவர்-தி-ஏர் (OTA) முறையில் கிடைக்கிறது. இந்த அப்டேட் ஐபோன் 5எஸ் மற்றும் அதன் பின் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் மட்டுமன்றி ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ, ஐபேட் 5-ம் தலைமுறை, ஐபேட் மினி 2 மற்றும் ஐபாட் டச் 6-ம் தலைமுறை சாதனங்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.0.3 இன்ஸ்டால் செய்ய முடியும். முன்னதாக ஆப்பிள் வெளியிட்ட அப்டேட்டில் அதிகப்படியான புதிய எமோஜிக்கள் சேர்க்கப்பட்டன. புதிய அப்டேட் பெற ஐபோனின் செட்டிங்ஸ் — ஜெனரல் — சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.