அவுஸ்ரேலிய ஜூனியர் அணியில் நிறவெறி!

பாகிஸ்தானில் பிறந்து அவுஸ்ரேலிய சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் நிறவெறி விமர்சனங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிறந்து இளம் வயதில் அவுஸ்ரேலிய சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் 30 வயதான பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் வாய்ஸ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

சிட்னியில் இளம் வீரராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்களை சந்தித்து இருக்கிறேன். இதனால் அவுஸ்ரேலிய அணியை ஆதரிக்க முடியாத அளவுக்கு கோபம் அடைந்து இருக்கிறேன். வீரர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் வசைபாடுதலை சந்திக்க கடுமையான மனம் வேண்டும்.

சில வசைகளை வெளியில் சொல்ல முடியாது. அவை இன்னும் கூட என்னை காயப்படுத்துகின்றன. அதனை நான் வெளிக்காட்டி கொள்ளமாட்டேன். நான் ரன்கள் அடிக்கும் போதெல்லாம் நிறவெறி வசையை வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறேன். இதனை சில வீரர்களின் பெற்றோர் மிகவும் சீரியசாக எடுத்து கொள்வதையும் பார்த்து இருக்கிறேன்.

இந்த நிறவெறி போக்கு தான் அவுஸ்ரேலியாவில் பிறக்காத என்னுடைய நண்பர்கள் பலர் விளையாட்டில் அவுஸ்ரேலிய அணியை ஆதரிக்காததற்கு காரணமாகும். நானும் கூட அப்படி தான் இருந்தேன். கடந்த காலங்களில் அவுஸ்ரேலிய அணி தேர்வில் நிறவெறியும், அரசியலும் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதனால் பலர் விளையாட்டில் இருந்து விலகி இருக்கின்றனர் என்பதை பலர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் மெதுவாக மாற்றம் அடைந்து வருகிறது. அவுஸ்ரேலியா என்றால் உண்மையில் என்ன என்பதை அது பிரதிபலிக்க தொடங்கி உள்ளது. பலதரப்பட்ட மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் அணியாக உருவெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.