அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 4 செல்ஃபி லைட் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மா்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
அசுஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மலேசியாவை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி மாஸ்டர் என அசுஸ் நிறுவனம் குறிப்பிட்ட புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை அக்டோபர் 4-ம் தேதி முதல் துவங்கும் என அந்நிறுவன வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் விலை 156 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அசுஸ் சென்போன் 4 செல்பி லைட் ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. 13 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளதோடு 140 கோணத்தில் பானரோமா ஆங்கிள் மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இத்துடன் போர்டிரெயிட் மோட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச் IPS டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் பிராசஸர்
– 2 ஜிபி ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 13 எம்பி செல்ஃபி கேமரா
– 3000 எம்ஏஎச் பேட்டரி
ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் சார்ந்த Zen UI 4.0, டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் இணைக்கப்பட்டுள்ளது. மெட்டல் பாடி கொண்டுள்ள அசுஸ் சென்போன் 4 செல்ஃபி லைட் சன்லைட் கோல்டு, ரோஸ் பின்க், டீப்சீ பிளாக் மற்றும் மின்ட் கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.