கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்கள் நாளை நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதில் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கினறன. இந்நிலையில், புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் எவான் பிளாஸ் எனும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.
எவான் பிளாஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்கள் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களின்படி கூகுள் பி்க்சல் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அக்டோபர் 19-ம் தேதி துவங்கும் என்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன் நவம்பர் 15-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்களின் விலை முறையே 649 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.42,603 மற்றும் 840 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,141 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இத்துடன் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் 1080 பிக்சல், 16:9 டிஸ்ப்ளே மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போனில் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன்களின் பின்புறம் பாதி கிளாஸ் மற்றும் பாதி மெட்டல் மூலம் வடிவமைக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களிலும் கைரேகை ஸ்கேனர் பின்புறம் பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் சாம்சங் வெளியிட்ட நோட் 8 மற்றும் S8 பிளஸ் அல்லது ஐபோன் X போன்று இல்லாமல் புதியஸ்மார்ட்போனில் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிக்சல் XL 2 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவினை எல்ஜி தயாரிப்பதாக தகவல்கள் வெளியானது.
இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களிலும் ஹோம் பட்டன் பின்புறம் வழங்கப்படும் என்றும், ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கலிபோர்னியாவில் நடைபெற இருக்கும் புதிய கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விழாவினை கூகுள் நிறுவனம் யூடியூபில் நேரலையில் காணும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.