காகிதத்தில் விமானம் செய்து காற்றில் வீசுவது எல்லா சிறு வயதினருக்கும் பிடித்த விளையாட்டு. ஆனால், கையைவிட்டு கிளம்பியதும் விமானம் சிறுவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. விடுவித்த வேகம், வீசும் காற்றைப் பொறுத்து காகித விமானம் தரையைத் தொடலாம் அல்லது சில வினாடிகள் பறந்து மெல்லத் தரையிறங்கலாம்.
இந்த காகித விமானத்திற்குள் ஒரு சிறிய இயந்திரத்தை பொருத்தி, அதை கட்டுப்படுத்தும் திறனை சிறுவர்களுக்குத் தந்தால்? அதைத்தான் செய்திருக்கிறது, ‘பவர் அப் டார்ட்.’
லித்தியம்-பாலிமர் மின்கலன், ஒரு மின் விசிறி மற்றும் மோட்டாரைக் கொண்ட பவர் அப் டார்ட்டை மொபைல் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம். எனவே, காகித விமானத்தை சிறுவர்கள் தங்கள் விருப்பப்படி வெகு நேரம் காற்றில் பறக்கவிட முடியும். தவிர சிறிய கமரா ஒன்றும் இந்த விமானத்தில் பொருத்த முடியும்!