2018-ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் ஒருமனதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தி பட இயக்குனர் அமித் மசூர்கர் இயக்கிய ‘நியூட்டன்’ திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடிகர்கள் ராஜ்குமார் ராவ், பங்கஞ் திரிபாதி, ரகுபிர் யாதவ், நடிகை அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நேர்மையான தேர்தல் அதிகாரி தேர்தலை நடத்துவதில் ஏற்படும் சிரமத்தை பற்றி கூறி இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய திரைப்பட கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் ஒருமனதாக பரிந்துரை செய்யப்பட்டதாக தேர்வு குழு தலைவர் சி.வி.ரெட்டி தெரிவித்தார்.
இது குறித்து இயக்குனர் அமித் மசூர்கர் கூறுகையில், என்னுடைய படம் வெளியான அன்றே ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Eelamurasu Australia Online News Portal