ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானது

ஒன்பிளஸ் நிறுவனம் பிரான்ஸ் வடிவமைப்பாளரான ஜீன்-சார்லஸ் டீ கேசல்பெஜக் உடன் இணைந்து ஒன்பிளஸ் 5 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் வடிவமைப்பாளர் ஜீன்-சார்லஸ் டி கேசல்பெஜக் இணைந்து லிமிட்டெட் எடிஷன் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளன. ஒன்பிளஸ் 5 JCC+ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் கலெக்ஷன் டிசைனர் ரகத்தை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போனின் விலை 559 யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒன்பிளஸ் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய ஒன்பிளஸ் 5 JCC+ ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் வழங்கப்படவில்லை. ஸ்லேட் கிரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் மஞ்சள், சிவப்பு மற்றும் நீல நிறங்கள் கொண்டிருக்கிறது.

புதிய கலெக்ஷன் எடிஷனில் வழங்கப்படும் உபகரணங்கள் இந்தியாவில் வெளியிடப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் இதனை ஒன்பிளஸ் ஸ்டோரில் அக்டோபர் 2-ம் திகதி முதல் வாங்க முடியும் என அறிவித்துள்ளது. கலெக்ஷன் எடிஷனுடன் நெவர் செட்டிள் வாசகம் அடங்கிய சட்டை ரூ.1,999 மற்றும் பை ரூ.1599க்கு வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 5 சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்
– 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– 3300 எம்ஏஎச் பேட்டரி
– டேஷ் சார்ஜிங் வசதி
– ப்ளூடூத், என்எஃப்சி, வைபை
– எல்டிஇ, வோல்ட்இ

சமீபத்தில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் க்ரோமா தளத்துடனான கூட்டணியை அறிவித்தது. இதன் மூலம் சமீபத்திய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் க்ரோமா தளங்களில் விற்பனை செய்யப்படும். ஒன்பிளஸ் தளத்தில் புதிய ஒன்பிளஸ் 5 விலை ரூ.32,999 முதல் துவங்குகிறது.