ஜியோணி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. X1s என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த X1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோணி இந்தியவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஜியோணி X1s என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட X1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
இந்தியாவில் புதிய ஜியோணி X1s ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கும் ஜியோணி X1s விற்பனை செப்டம்பர் 21-ம் தேதி முதல் துவங்கும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோணி X1s வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 ஜிபி டேட்டா மற்றும் ரூ.250 மதிப்புள்ள இரண்டு பேடிஎம் கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. இவை பேடிஎம் மாலில் குறைந்தபட்சம் ரூ.350க்கு பொருட்களை வாங்கும் போது வழங்கப்படுகிறது.
ஜியோணி X1s சிறப்பம்சங்கள்:
– 5.2 இன்ச் டிஸ்ப்ளே 720×1280 பிக்சல் ரெசல்யூஷன்
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
– 3 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– 4000 எம்ஏஎச் பேட்டரி
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
– டூயல் சிம் ஸ்லாட்
– 4ஜி, வோல்ட்இ, 3ஜி
– வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ்
சமீபத்தில் ஜியோணி தனது A1 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது. வெளியீட்டின் போது ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்பட்ட ஜியோணி A1 தற்சமயம் ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஜியோணி A1 ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி கூடுதல் டேட்டா முதல் முறை ரீசார்ஜ் செய்யும் போது வழங்கப்படுகிறது. இத்துடன் பேடிம் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனினை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.250 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.