ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் முழு தகவல்கள் மற்றும் இந்திய வெளியீடு சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புத்தம் புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் 2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் டர்போ சார்ஜ்டு இன்ஜின் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை ஹேட்ச்பேக் மாடல்களில் 1.6 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் 138bhp மற்றும் 5,500rpm செயல்திறன் 230Nm இல் 2,500-3,500rpm செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய சுசுகி ஸ்விஃப்ட் முந்தைய மாடலை விட 80 கிலோ எடை குறைவாகவும், வழக்கமான ஸ்விஃப்ட் மாடல்களை விட 50 மில்லிமீட்டர் நீளமாகவும் உள்ளது.
இதன் வீல்பேஸ் அகலம் 20 மில்லிமீட்டர் மற்றும் 40 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் புதிய சஸ்பென்ஷன் மற்றும் ரிவர்ஸ்டு முன்பக்க பம்ப்பர், புதிய கிரில் மற்றும் முன்பக்க ஸ்ப்லிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் 17-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல் மற்றும் ஸ்போர்டி பிளாக் டிஃப்யூசர், எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்புறங்களில் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் ஸ்போர்ட்ஸ் சீட் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச், லெதர் ராப்டு ஃபிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீ்ல், மற்றும் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.