இந்தியா உடனான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்ரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று சென்றடைந்தது.
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்திகதி நடக்கிறது.
இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அவுஸ்ரேலிய அணி நேற்றிரவு சென்னை விமான நிலையத்தைசென்றடைந்தது. பின்னர், அவர்கள் பேருந்து மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். இதனால், அங்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Eelamurasu Australia Online News Portal