கூகுளின் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள்!

முன்னதாக வெளியான தகவல்களில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வால்ஐ என அழைக்கப்படும் என கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.97 இனஅச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 836 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படும் என்றும் முந்தைய மாடலை மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் XL 2 ஸ்மார்ட்போன் தைமென் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருந்தது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் எல்ஜி நிறுவனம் தயாரித்த 5.99 இன்ச் OLED குவாட் எச்டி 1440×2560 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் XL 2 ஸ்மார்ட்போனில் OLED பேனல், துல்லியமாக நிறங்களை பிரதிபலிக்கும் திறன் கொண்டிருக்கும். முன்னதாக வெளியான தகவல்களில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் 880 மில்லியன் டாலர்களை எல்ஜியின் டிஸ்ப்ளே தயாரிப்பு பிரிவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் 2017 பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான OLED பேனல்களை எல்ஜி தயாரித்து வழங்கும் என தகவல்கள் வெளியானது.