மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன்

தலைசிறந்த டிஸ்ப்ளே மட்டுமின்றி பல்வேறு தலைசிறந்த சிறப்பம்சங்களை இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
இந்தியாவில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள டிஸ்ப்ளே சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ், எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
கேன்வாஸ் இன்ஃபினிட்டி சிறப்பம்சங்கள்:
 
– 5.7 இன்ச் எச்டி 720×1440 பிக்சல் IPS டிஸ்ப்ளே
– ஸ்னாப்டிராகன் 425 குவாட்கோர் பிராசஸர்
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– 2900 எம்ஏஎச் பேட்டரி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– கைரேகை ஸ்கேனர்
புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு 24 மணி நேரத்தில் சர்வீஸ் செய்யும் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்படும் போது 24 மணி நேரத்தில் சரி செய்தோ அல்லது புதிய சாதனத்தை வழங்கப்படும். மைக்ரோமேக்ஸ் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் சென்டர்களில் இந்த வசதி வழங்கப்படும் என்றும் இந்தியாவில் இயங்கி வரும் மைக்ரோமேக்ஸ் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் சென்டர்கள் சார்ந்த தகவல்கள் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போனில் தற்சமயம் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் எதிர்காலத்தில் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் என மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியவில் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அமேசான் பே கணக்கில் ரூ.250 கேஷ்பேக், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 30 ஜிபி வரை கூடுதல் டேட்டா, அமேசான் கின்டிள் சேவையில் சைன்-இன் செய்து அதிகம் விற்பனையாகும் ஐந்து புத்தகங்களை இலவசமாக பெற முடியும்.