அப்பிள் நிறுவனத்தின் 2017 கீநோட் நிகழ்வில் புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் கைக்கடிகாரம் 3 சாதனமும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐபோன்களை போன்றே புதிய அப்பிள் வாட்ச் 3 சார்ந்த தகவல்களும் இணையத்தில் கசிந்துள்ளது.
அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களுடன் வெளியாக இருக்கும் ஆப்பிள் வாடச் 3 சார்ந்த பல்வேறு தகவல்கள் அப்பிள் வல்லுநர்கள் சார்பில் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் அப்பிள் கீநோட் நிகழ்வில் புதிய அப்பிள் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அந்தவகையில் புதிய ஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தின் சில மாடல்களில் எலெக்ட்ரானிக் எல்டிஇ வசதி கொண்ட சிம் கார்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய எல்டிஇ இ-சிம் வாட்ச்-ஐ போனாக மாற்றாது என கூறப்பட்டுள்ளது. புதிய இ-சிம் எல்டிஇ கொண்டிருக்கும் என்பதால் சில சந்தைகளில் மட்டுமே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பிள் வாட்ச் 3 சாதனத்தில் இ-சிம் வழங்கப்பட்டாலும், இதில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படாது என்றும், டேட்டா டிரான்ஸ்மிஷன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதிய ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கான பேஸ்பேன்ட் சிப்செட்களை குவால்காம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இவற்றை இன்டெல் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்பட்டது.
புதிய அப்பிள் வாட்ச் 3 சார்ந்து எவ்வித புகைப்படமும் வெளியாகாத நிலையில், இந்த சாதனம் எவ்வாறு காட்சியளிக்கும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இவை ஏற்கனவே ஆப்பிள் அறிமுகம் செய்து, விற்பனை செய்யப்படும் வாட்ச் மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தில் பில்ட்-இன் குளூகோஸ் மானிட்டர் வழங்கப்படும் என்றும் இதில் பார்க்க தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடல்களை போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய வகை டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக்கப் மற்றும் எல்டிஇ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.