உலகில் முதல்முறையாக அவுஸ்ரேலியாவில் 5G mobile அறிமுகம்!

உலகில் முதல்முறையாக 5G mobile அவுஸ்ரேலியாவில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆண்டு (2018) Gold Coast நகரில் நடைபெறும் Commonwealth Games விளையாட்டைக் காண வருகை தருபவர்களுக்கு தாம் அறிமுகம் செய்யப்போவதாக அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான Telstra அறிவித்துள்ளது.

5G mobile phone தொழில்நுட்பம் தற்போதைய 4G mobile phone தொழில்நுட்பத்தைவிட ஐம்பது மடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தை சில வினாடிகளிலேயே ஒருவர் தரவிறக்கம் (Download) செய்ய இயலும் என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ஆனால் 5G mobile phone தொழில்நுட்பம் மனித உடலில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து முழுமையான ஆய்வுகள் நடத்தப்படவேண்டுமென சர்வதேச வல்லுனரும் பின்லாந்து நாட்டின் Helsinki பலகலைக்கழக பேராசிரியருமான Dariusz Leszczynski வலியுறுத்தியுள்ளார்.