அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தகவல்களின் படி புதிய ஐபோன் SE அந்நிறுவனத்தின் விலை குறைந்த சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய ஐபோன் SE ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐபோன் SE 2017 விலை €399 அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,517 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஐபோன் SE விலை ரூ.36,239 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்பிள் வழக்கப்படி ஆகஸ்டு மாதம் ஐபோன்கள் வெளியிடப்படாது. செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆப்பிளின் முதல் ஐபோன் SE மார்ச் 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
4-இன்ச் திரை கொண்ட ஐபோன் SE சக்திவாய்ந்த ஹார்டுவேர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமராக்களை கொண்டுள்ளது. மற்ற ஐபோன்களை விட ஐபோன் SE பிரபலமில்லாத மாடலாகவே பார்க்கப்படுகிறது. எனினும் வாடிக்கையாளர்கள் இந்த மாடலுக்கு வழங்கி வரும் வரவேற்பு காரணமாக ஐபோன் SE அப்டேட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாடல்களின் மெமரி 32 ஜிபி மற்றும் 128 ஜிபி வரை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஐபோன் SE தயாரிப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இந்த ஐபோன்களின் விநியோகம் துவங்கிய நிலையில் இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி ஐபோன் SE தற்சமயம் ரூ.23,398 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal