ஸ்மார்ட்போன்கள் சீராக இயங்க மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக பிராசஸர்கள் இருக்கிறது. எனினும் பிராசஸர்கள் என்றால் என்ன, இது நம் ஸ்மார்ட்போன்களில் என்ன செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களின் மிக முக்கிய பாகமாக அதன் பிராசஸர் இருக்கிறது. நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு விதமான பிராசஸர்கள் வழங்கப்படுகின்றன. எக்சைனோஸ், ஆக்டா கோர், குவாட் கோர் என இத்தனை பிராசஸர்கள் நம் ஸ்மார்ட்போனில் எவ்வாறு வேலை செய்கிறது?
பிராசஸர் என்றால் என்ன?
உங்களின் ஸ்மார்ட்போன் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை பிராசஸர்கள் தான் செய்யும். ஒவ்வொரு மொபைல் போனும் சாதாரண லேண்ட்லைன் டெலிபோன்கள் ஆகும். போர்டபிள் கம்ப்யூட்டர்களான ஸ்மார்ட்போன்களில் டெலிபோன் வசதிகளும் வழங்கப்படுகிறது.
மென்மையான தொடுதிரை டிஸ்ப்ளேவினுள் முழுமையான கம்ப்யூட்டர் வேலை செய்யும், இவை உங்களது செயலிகள் எவ்வாறு வேலை செய்ய வேண்டும், ஜி.பி.எஸ். எவ்வாறு உங்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் என்பதை செய்து முடிக்க பொருப்பு வகிக்கும். பொதுவாக அனைத்து வேலைகளுக்கும் மூளையாக பிராசஸர்களே இருக்கின்றன.
கோர் என்றால் என்ன?
மெயின் பிராசஸர்களில் பணிகளை சரியாக புரிந்து கொண்டு, செயல்படுத்துவதை கோர் சரியாக செய்யும். சாதனங்களில் துவக்கத்தில் சிங்கிள்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டன. ஆனால் பொறியாளர்கள் அதிக சக்திவாய்ந்த கோர்களஐ ஒவ்வொரு சாதனத்திலும் வழங்கியுள்ளனர். இவை டூயல்-கோர் சாதனங்களில் இருந்து குவாட்-கோர், ஹெக்சா-கோர் மற்றும் ஆக்டா கோர் (எட்டு கோர்கள்) வரை ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் வழங்கப்படுகின்றன.
அதிக கோர்களின் பயன்?
ஸ்மார்ட்போன்களில் அதிக கோர் கொண்ட பிராசஸர்கள் எனில் அவை உங்களது சாதனத்தில் அதிகப்படியான பணிகளை அதிவேகமாக செய்து முடிக்கும். இதனால் செயலிகள் வேகமாக லோடு ஆகும், அதிக தரமுள்ள புகைப்படம் அல்லது எச்.டி. தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். அனிமேஷன்கள் சீராக இயங்கும், கேமிங்-இன் போது, ஸ்மார்ட்போன் வேகம் குறையாது.
இதேபோல் பல்வேறு பயன்களை வழங்கும் கோர்கள் இருந்தால் ,ஸ்மார்ட்போன்களின் செயல்திறனை ஊக்குவிக்க முடியும்.
ஆக்டா-கோர் ஸ்மார்ட்போனை விட குவாட்-கோர் வேகமானதா?
ஆக்டா-கோர் பிராசஸர் குவாட்-கோரை விட வேகமாக இயங்குவது இவை செயல்படுத்தும் அம்சங்களை சார்ந்தது.
அதாவது ஸ்மார்ட்போனில் வெப் பிரவுசிங் செய்யும் போது ஒரு கோர் வேலை செய்யும், மற்ற கோர்கள் எதுவும் செய்யாது. அடுத்து ஸ்மார்ட்போனில் அழைப்பு வரும் போது இரண்டாவது கோர் வேலை செய்யும். இரண்டு அம்சங்களும் சீராகவும், வேகமாகவும் இயங்கும் ஆனாலும் இவை இருமடங்கு வேகத்தில் இயங்காது.
மற்ற அம்சங்கள்?
ஸ்மார்ட்போன்கள் இயங்க மிக முக்கிய அம்சங்களில் பிராசஸர் ஒன்று. இதைத் தவிர கிராஃபிக்ஸ் பிராசஸிங் யுனிட், ரேம், வை-பை ஆன்டெனா, ஜி.பி.எஸ். என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து வேலை செய்யும். இதனால் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை வாங்க அனைத்து அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன்களை வாங்கும் முன் பிராசஸர்களை பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும். ஸ்மார்ட்போன் அதிவேகமாக இயங்க மல்டி-கோர் பிராசஸர் கொண்ட மாடல்களை வாங்கலாம்.