அவுஸ்ரேலியா – சுவர் சாயத்திலிருந்தே ஹைட்ரஜன் தயாரிக்கலாம்!

அவுஸ்ரேலியாவிலுள்ள ஆர்.எம்.ஐ.டி., பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதிலுள்ள ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் சுவர் சாயத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சாயத்தில், ‘டைட்டானியம் ஆக்சைடு’ துகள்கள், புதிதாக உருவாக்கப்பட்ட, ‘மாலிப்தீனம் சல்பைடு’ ஆகியவை உள்ளன. இவை, காற்றின் ஈரப்பதத்திலுள்ள ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் பிரித்தெடுக்க உதவுகின்றன.

இந்த வேதி வினைக்குத் தேவையான சக்தி, சூரிய ஒளியிலிருந்தே கிடைத்துவிடுகிறது. பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும்.

இந்த கண்டுபிடிப்பு, எந்த சுவரையும் ஹைட்ரஜன் தயாரிக்கும் ஆலையாக மாற்றிவிடும். இந்த தொழில்நுட்பம் எல்லாருக்கும் பயன்பட வேண்டும் என்பதால், ஆர்.எம்.ஐ.டி.,யின் விஞ்ஞானிகள் இதற்கு காப்புரிமை பெறாமல், திற மூல தொழில்நுட்பமாக அறிவித்துள்ளனர்.