மின் சைக்கிள்!

ஒரு நபர் பயணிக்க மிக சிக்கனமான வாகனம் சைக்கிள் தான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உடல் நலப் பிரியர்கள் இன்று சைக்கிள் பக்கம் திரும்புவதால், ஏற்கனவே உள்ள சைக்கிள்களுக்கு, மின் மோட்டார் பொருத்துவது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறார் அசாப் பிதர்மேன். இவர், அமெரிக்காவிலுள்ள மாசாசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின், ‘சென்ஸ் ஏபிள் சிட்டி’ என்ற திட்டத்தின் ஆராய்ச்சியாளராக இருந்தபோது, ஒரு மோட்டாரை கண்டுபிடித்தார்.

கோபன்ஹேகன் நகரின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த சைக்கிள் இயந்திரத்திற்கு, ‘கோபன்ஹேகன் சக்கரம்’ என்றே பெயர். சைக்கிளின் பின்சக்கரத்தில் பொருத்துவதற்கு ஏற்ற இந்த மோட்டார், பல முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவரவே, ‘சூப்பர் பெடஸ்ட்ரியன்’ என்ற சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தை, 2009ல் துவங்கினார்.உலகிலுள்ள பெரும்பாலான சைக்கிள்களின் பின்சக்கரத்தில் பொருத்தக்கூடிய, 350 வாட் மோட்டார் கொண்ட தட்டு போன்ற அமைப்பை பிதர்மேன் உருவாக்கினார்.

இதனுடன், 48 வோல்ட் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயான் மின்கலனும் இணைக்கப்பட்டுள்ளது. சைக்கிளை மிதிப்பவரின் திறனை அறிய பல உணரிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேடு, கடினமான சாலைகளில் மிதிக்க ஆரம்பிக்கும்போதே, மோட்டாரும் உணர்ந்து கொண்டு ஒத்தாசை செய்கிறது.

தனால், சைக்கிள் ஓட்டுவது அயர்ச்சி தருவதாகவோ, அதிக வியர்வை சிந்த வைக்கக் கூடியதாகவோ இருக்காது என்கிறார் பிதர்மேன். இந்த மோட்டாருடன், 7 முதல், 10 கியர்கள் கொண்ட அமைப்பையும் சேர்க்க முடியும். தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த சைக்கிளின், 97 ஆயிரம் ரூபாய் விலை தான் நம்மை பிரேக் அடிக்க வைக்கிறது!

ஒரு நபர் பயணிக்க மிக சிக்கனமான வாகனம் சைக்கிள் தான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உடல் நலப் பிரியர்கள் இன்று சைக்கிள் பக்கம் திரும்புவதால், ஏற்கனவே உள்ள சைக்கிள்களுக்கு, மின் மோட்டார் பொருத்துவது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறார் அசாப் பிதர்மேன்.

இவர், அமெரிக்காவிலுள்ள மாசாசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின், ‘சென்ஸ் ஏபிள் சிட்டி’ என்ற திட்டத்தின் ஆராய்ச்சியாளராக இருந்தபோது, ஒரு மோட்டாரை கண்டுபிடித்தார். கோபன்ஹேகன் நகரின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த சைக்கிள் இயந்திரத்திற்கு, ‘கோபன்ஹேகன் சக்கரம்’ என்றே பெயர். சைக்கிளின் பின்சக்கரத்தில் பொருத்துவதற்கு ஏற்ற இந்த மோட்டார், பல முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவரவே, ‘சூப்பர் பெடஸ்ட்ரியன்’ என்ற சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தை, 2009ல் துவங்கினார்.

உலகிலுள்ள பெரும்பாலான சைக்கிள்களின் பின்சக்கரத்தில் பொருத்தக்கூடிய, 350 வாட் மோட்டார் கொண்ட தட்டு போன்ற அமைப்பை பிதர்மேன் உருவாக்கினார். இதனுடன், 48 வோல்ட் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயான் மின்கலனும் இணைக்கப்பட்டுள்ளது. சைக்கிளை மிதிப்பவரின் திறனை அறிய பல உணரிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மேடு, கடினமான சாலைகளில் மிதிக்க ஆரம்பிக்கும்போதே, மோட்டாரும் உணர்ந்து கொண்டு ஒத்தாசை செய்கிறது. இதனால், சைக்கிள் ஓட்டுவது அயர்ச்சி தருவதாகவோ, அதிக வியர்வை சிந்த வைக்கக் கூடியதாகவோ இருக்காது என்கிறார் பிதர்மேன். இந்த மோட்டாருடன், 7 முதல், 10 கியர்கள் கொண்ட அமைப்பையும் சேர்க்க முடியும். தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த சைக்கிளின், 97 ஆயிரம் ரூபாய் விலை தான் நம்மை பிரேக் அடிக்க வைக்கிறது!