குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் எல்லாம் ஹீரோ – ஹீரோயின்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார், கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர். உறுதிகொள் என்ற படத்தில், கிஷோர், ஹீரோவாகவும், மேகனா என்பவர், ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.
இதுவரை வெளியான படங்களில் எல்லாம், பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை, உயர்வாகவும், நியாயப் படுத்தியும் காட்டியுள்ளனர். ஆனால், இந்த படத்தில், பள்ளி பருவ காதல், தவறானது என்றும், அதனால் ஏற்படும் விபரீதங்களையும் சுட்டிக் காட்டியுள்ளோம் என்கிறது, படக்குழு.
Eelamurasu Australia Online News Portal