பூவெல்லாம் உன் வாசம், ஷாஜஹான் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சோனா, அதன்பிறகு கவர்ச்சி நடிகை ஆனார். சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, கோ, ஒன்பதுல குரு, யாமிருக்க பயமே, ஜித்தன் 2 உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சியாக நடித்தார்.
கனிமொழி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அந்தப் படம் படுதோல்வி அடையவே கடும் பொருளாதார பிரச்சினையில் சிக்கினார். இயக்குனர் வெங்கட்பிரபு மீது பணமோசடி குற்றாட்டையும், எஸ்.பி.பி.சரண் மீது பாலியல் குற்றச்சாட்டையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தான் நடத்தி வந்த செயற்கை நகை விற்பனை கடையையும் மூடினார் அதன்பிறகு மலையாளத்தில் நடிக்க ஆதரம்பித்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது, சமீபகாலமாக நமீதா இவர் இடத்தை பிடித்து விட்டதால் அந்த வாய்ப்பும் குறைந்து விட்டது.
இதனால் 38 வயதே ஆனா சோனா ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க முடியு செய்துவிட்டார். நான் யாரென்று நீ சொல் என்ற படத்தில் புதுமுக ஹீரோயின் சுரேகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார். இனி தொடர்ந்து அம்மா கேரக்டர்களில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal