அவுஸ்ரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்தை தட்டி சென்றனர்.
அவுஸ்ரேலிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் அரைஇறுதியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி-பூஜா ஜோடி 4-11, 6-11, 2-11 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் மெங்-சு யுலிங் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இதனால் இந்திய ஜோடி வெண்கலப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சத்யன், சனில் ஷெட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்கள்.