கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்ட ஐபோன்!

அப்பிளின் 2017 ஐபோன் சார்ந்த கேட் ஃபைல்கள் இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் வீடியோ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அப்பிள் ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் இன்னும் சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் கசிந்த கேட் ஃபைல்களில் ஆப்பிளின் புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதிய ஐபோன் சார்ந்த வீடியோ ரென்டர்கள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் இணைந்துள்ள புதிய வீடியோவில் கேட் ஃபைல்களில் இடம்பெற்றிருந்த தகவல்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஐபோன் 8 ப்ரோட்டோடைப் சேர்ந்துள்ளது.

புதிய ப்ரோட்டோடைப் வீடியோவில் புதிய ஐபோன் கிளாஸ் மற்றும் மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐபோன்களை விட புதிய கிளாஸ் மற்றும் மெட்டல் ஐபோன் பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஐபோனின் பவர் பட்டன் நீண்டதாகவும், டிஸ்ப்ளே அருகில் வழக்கத்தை விட சற்றே கீழே பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய தகவல்களில் அதிகம் இடம்பெற்றிருந்த டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த ஆண்டு ஐபோனில் இடம்பெறாது என்றும் இதன் டச்ஐடி-யாக பவர் பட்டன் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ள கேமரா அமைப்பு மற்றும் இரு கேமராக்களிடையே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
ஐபோன் 2017 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
* 5.8 இன்ச் வளைந்த OLED டிஸ்ப்ளே
* டூயல் கேமரா அமைப்பு
* கைரேகை ஸ்கேனர்
* அதிக திறன் கொண்ட பேட்டரி
* சிறிய சிப்செட்
* கிளாஸ் வடிவமைப்பு
ப்ரோட்டோடைப் என்பதால் ஹார்டுவேர், முன்பக்க கேமரா, மைக் மற்றும் இதர சென்சார்கள் சார்ந்த தகவல்கள் இந்த வீடியோவில் இடம்பெறவில்லை. 2017 ஐபோன் ஸ்பெஷல் எடிஷன் என்பதால் ஐபோன் 8 என அழைக்கப்படாது என்றும், இதற்கென பிரத்தியேக பெயர் சூட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் ஆப்பிள் வரலாற்றில் விலை அதிகமான ஐபோனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
https://www.youtube.com/watch?v=dD-KvMB2kJE