மகளிர் உலககோப்பை – அவுஸ்ரேலிய கப்டனுக்கு ஓய்வு!

பாகிஸ்தானுடன் இன்று நடைபெற உள்ள லீக் சுற்று ஆட்டத்தில் தோள்பட்டை காயம் காரணமாக அவுஸ்ரேலிய கப்டன் மெக் லனிங் விளையாட மாட்டார்.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இன்று (5) நடைபெற உள்ள லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் விளையாடுகின்றன. அவுஸ்ரேலிய அணியின் கப்டனும் அதிரடி ஆட்டகாரருமான மெக் லனிங்கிற்கு, சென்ற போட்டியில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இனி வர உள்ள முக்கிய போட்டிகளை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 30 வயதான ரேச்சல் ஹேனஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அணியில் இடம் பிடித்துள்ளார். அவரே இப்போட்டிக்கு கேப்டனாகவும் செயல்படுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இரு அணிகளுமே இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளன. அவுஸ்ரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து எழாவது இடத்தில் உள்ளது.