மட்டக்களப்பில் சிறிலங்காவிற்கான அவுஸ்ரேலிய தூதுவர் Bryce Hutchesson அவர்களை சந்தித்து மட்டக்களப்பில் உள்ள பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்.
யுத்த காலத்திலும் , யுத்தத்திற்குப் பின்னரும் தொடர்ச்சியாக எமது மாவட்டத்தில் பாரிய சவால்களை முகம் கொடுத்து வருபவர்களாக எம் மக்கள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பை நோக்கி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருவதே மிக அரிது.
நான் நினைக்கின்றேன் மட்டக்களப்பில் யுத்தமே நடக்கவில்லை, மக்கள் பாதிக்கப்படவில்லை என பலர் நினைக்கிறார்கள் போல. ஆனால் நீங்கள் எம்மாவட்ட பிரச்சினைகளை செவிமடுத்தமையை விட முதலில் அழைப்பை ஏற்று இங்கு வந்தமை வரவேற்கதக்கது.பாராட்டுக்குரியது.
இலங்கையிலேயே விதவைத் தாய்மார்களைக் அதிகம் கொண்ட மாவட்டமாக எம் மாவட்டமுள்ளது.சுமார் 36000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இங்கே உள்ளன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் 7000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். மேலும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் பற்றியும் தூதுவர் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
கடந்த காலத்தில் சரியான களத்தரிசிப்பை மேற்கொண்டு உங்கள் உதவிகளை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டுமெனவும் கூறினார்.