நீந்திக் கொண்டே பாடல் கேட்கலாம்… வாட்டர்ஃபுரூப் ஸ்பீக்கர்!

வாட்டர் ஃபுரூப் ஸ்மார்ட்போன், கேமிரா, வாட்ச் என்ற வரிசையில் தற்போது களமிறங்கியுள்ளது ’வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கர்’.

‘அல்டிமேட் இயர்ஸ்’ எனும் நிறுவனம் லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்பீக்கர் இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகியுள்ளது.

இதன் விலை ரூ.7,995 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாக், ரெட், ப்ளூ, பிங்க் மற்றும் பர்பிள் ஆகிய ஆறு வெவ்வேறு வண்ணங்களில் இந்த ஸ்பீக்கர் கிடைக்கிறது.

வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரை மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த முடியும். நீரில் மிதந்தபடி பாடலை கேட்கலாம். மேலும் 360 டிகிரி சரவுண்ட்டுக்கு ஒலியை கொடுக்கும் இந்த ஸ்பீக்கர்.

வொண்டர் பூம்மில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரத்திற்கு இதன் பேட்டரி திறன் இருக்குமாம். 5 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும், எந்தவித சேதமும் ஏற்படாது என அல்டிமேட் இயர்ஸ் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோ டிவைஸ்களில் கனெக்ட் செய்து இதனை பயன்படுத்த முடியும். இது 425 கிராம் எடை கொண்டது.