வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜ்களை, குறிப்பிட்ட நேரத்தில் மற்றவர்களுக்கு அனுப்ப என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் செயலியில் எந்நேரமும் குறுந்தகவல் அனுப்பினாலும், சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியம் அனைவருக்கும் ஏற்படும். இருந்தும் இதற்கான வசதியை வாட்ஸ்அப் இதுவரை வழங்கவில்லை. எனினும் வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ்களை நீங்கள் விரும்பிய நேரத்தில் அனுப்ப வழி செய்யும் பல்வேறு செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன.

அந்த வகையில் தினசரி அடிப்படையில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை பின்னர் அனுப்ப என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

 

கூகுள் பிளே ஸ்டோர்:
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஷெட்யூலர் ஃபார் வாட்ஸ்அப் (Scheduler for WhatsApp) மற்றும் ஷெட்யூலர் நோ ரூட் (Scheduler NO ROOT) செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டும். இவை வாட்ஸ்அப் மெசேஜ்களை நாம் நிர்ணயிக்கும் நேரத்தில் அனுப்புகின்றன.
 

 
இன்ஸ்டால்:
செயலியை இன்ஸ்டால் செய்ததும் செட்டிங்ஸ் — அக்சஸபிலிட்டி — சர்வீசஸ் சென்று சேவையை எனேபிள் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 
ஷெட்யூல் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் மெசேஜ்களை ஷெட்யூல் செய்ய ஷெட்யூலர் ஃபார் வாட்ஸ்அப் மெசேஜை கிளிக் செய்து + ஐகானினை கிளிக் செய்யுங்கள். இநி வாட்ஸ்அப் க்ரூப் அல்லது காண்டாக்ட்டினை கிளிக் செய்ய வேண்டும்.
இனி மெசேஜ் அனுப்பப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தை கிளிக் செய்ய வேண்டும். தேர்வு செய்ததும் மெசேஜை உருவாக்கும் ஆப்ஷனை கிளிக் செய்தால் மெசேஜ் ஷெட்யூல் செய்யப்பட்டு விடும்.
குறிப்பு:
நீங்கள் ஷெட்யூல் செய்த மெசேஜ் சரியான நேரத்தில் அனுப்ப உங்களது ஸ்மார்ட்போனில் லாக் ஸ்கிரீன் செயல்படுத்தப்பட்டிருக்க கூடாது. மேலும் ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டிருந்தால் இந்த வசதி வேலை செய்யாது.