பயண கணக்குகளை எளிதாக்கும் தொழில்நுட்பம்

பயணம் என்பது மிகப் பெரிய அனு பவம். நண்பர்களோடு சேர்ந்து பயணம் செய்வது இன்னும் அலாதி யானது. ஆனால் நண்பர்களோடு பயணம் செய்யும் போது சில தொந்தர வுகளும் இருக்கும். உதாரணமாக ஒரு நண்பர் உணவுக்கு செலவிடுவார். மற்றொருவர் எரிபொருளுக்கான பணத்தைக் கொடுப்பார். மற்றொரு நண்பர் நுழைவுக் கட்டணங்கள், டோல் கட்டணங்கள் ஆகியவற்றுக்குப் பணம் கொடுப்பார். ஆனால் கடைசியில் யார் யார் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது தெரியாமல் போய்விடும். யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் சில சமயங்களில் நண்பர்களுக்குள் பிரச்சினைகள் கூட வருவதுண்டு. தற்போது தொழில்நுட்பம் நம்முடைய பெருவாரியான வேலைகளை எளிதாக்கியுள்ளது. நிதி சார்ந்து நிறைய அப்ளிகேஷன்கள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன. பயணங்களில் நிதி மேலாண்மை செய்து கொள்வதற்காக தற்போது பல்வேறு அப்ளிகேஷன்கள் வந்துள்ளன.

பயண கணக்குகள்

பயண கணக்குகளை நிர்வகிக்க நீங்கள் ஆண்ட்ராய்டு போனிலோ அல்லது ஐபோனிலோ இதற்கான செயலியை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். இந்த அப்ளிகேஷன்களை இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் டவுன்லோடு செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன்கள் பயணக் கணக்குகளை நிர்வகிக்கும் வழிகளைக் கூறுகிறது. உதாரணமாக நின்ஜா அப்ளிகேஷன் உங்கள் பில்களை பிரித்து கணக்கிட உதவுகிறது. இந்த அப்ளிகேஷனில் உங்கள் பெயர் மற்றும் நண்பர்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டு ஒவ்வொருவரும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை பதிவேற்றி வைக்கமுடியும்.

அதுமட்டுமல்லாமல் உணவு, எரிபொருள் ரசீதுகளை தவிர மற்ற வகையான ரசீதுகளை உருவாக்கி கொள்ள முடியும். பதிவேற்றிய விவரங்களை எஸ்எம்எஸ், இமெயில், அல்லது கூகுள் டிரைவ் போன்றவை மூலமாக மற்ற நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளமுடியும். ஸ்மார்ட்போனில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் தகவல்களை பதிவேற்றும் போது மற்றவர்களுக்கும் தெரிவது போல் செய்துகொள்ளமுடியும். மேலும் செலவுக்கான ரசீதுகளை புகைப்படமாக எடுத்து அப்ளிகேஷனில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றாலும் அந்தந்த நாடுகளின் கரன்சிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும் முடியும்.

இந்த அப்ளிகேஷனை போன்று செட் டில் அப் என்ற அப்ளிகேஷன் உள்ளது. இந்த அப்ளிகேஷனும் செலவுகள் பற்றிய விவரங்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுகிறது. உதாரணமாக ஒரு நபர் பல்வேறு நபர்கள் சாப்பிட்டதற்கான கட்டணத்தை செலுத்தினால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஆனது என்பதை இதில் பதிவேற்றி கொள்ளமுடியும். இந்த தகவல்களை எக்ஸல் ஷீட்டில் பிரதியாக வைத்துக் கொள்ளமுடியும்.

ஸ்பிளிட்வைஸ் என்ற அப்ளி கேஷனும் இதேபோன்ற அம்சங்களை கொண்டிருக்கின்றன. இந்த அப்ளி கேஷனில் யார் எவ்வளவு தர வேண்டும் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பனவற்றை கண்காணிக்க முடியும். டிரைகவுண்ட் என்ற அப்ளிகேஷனை ஆன்லைனிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். யாருடைய கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என் பதை நிறத்தின் மூலம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. யார் அடுத்து செலவு செய்ய வேண்டும் என்பன போன்றவற்றை நமக்கு காட்டுகிறது.

பொதுவாக எல்லா அப்ளிகேஷன் களிலும் உங்களுடைய நண்பர்களை சேர்த்துக் கொள்ளமுடியும். உங்கள் நண்பர்களின் விவரங்களை நீங்கள் போன்புக் மூலமாகவே எடுத்துக் கொள்ள முடியும். பல்வேறு வகை யான நிகழ்ச்சிகளையும் குறித்துக் கொள்ளமுடியும். சில அப்ளிகேஷன் களை இணையதள இணைப்பு இல்லாம லேயே பயன்படுத்தலாம். ஆனால் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் இணையதள இணைப்பு கட்டாயம் தேவை.

மற்ற செலவுகளை போல் அல்லா மல் சாப்பாட்டு கட்டணத்தை கணக்கிடு வது ரொம்ப கடினம். சிலருக்கு குறை வாக சாப்பிடுவதால் கட்டணம் குறை யும். சிலர் இரவு விருந்துகளில் மது அருந்தமாட்டார்கள். இது போன்ற விவரங்களை பிரித்து அதன்பின் அப்ளி கேஷனில் சேமித்து வைக்கவேண்டும். சாப்பாட்டு செலவுகளை மட்டும் கணக்கிடுவதற்கு சில அப்ளிகேஷன்கள் உள்ளன. பிளேட்ஸ் பை ஸ்பிள்வைஸ் என்ற அப்ளிகேஷன் உங்களது உணவு ரசீது கட்டணங்களை எளிதாக சேமித்து வைக்க உதவுகிறது. இதேபோன்று சேவைகளை வழங்குவதற்கு பிளிர், திவ்வி போன்ற அப்ளிகேஷன்கள் உள்ளன.

ஒவ்வொரு பயணமும் நமக்கு வேறு ஒரு பரிமாணத்தை தந்து கொண்டே இருக்கும். முழுக்க பயணங்களை மட்டும் அனுபவிக்க வேண்டுமென்றால் மற்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தக் கூடாது. அதாவது எவ்வளவு செலவு செய்ய வேண்டும், நாம் எவ் வளவு செலவு செய்திருக்கிறோம் என்பது போன்ற பிரச்சினைகள் நம் மனதில் தோன்றக்கூடாது. அதைப் போக்குவதற்கே இதுபோன்ற அப்ளிகேஷன்கள் உதவுகின்றன. இதைப்பயன்படுத்தி பயணங்களை இனிமையாக்குங்கள்!